November 29, 2021

இந்தியாவுக்கு மாறும் ஜெர்மனி & சீனாவில் உள்ள முன்னணி உற்பத்தி தொழிற்சாலைகள்!

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா, சீனாவில் உள்ள தனது தொழிற்சாலையை இந்தியாவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு 800 கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே Wellx என்னும் ஜெர்மனி நாட்டின் காலணி தயாரிக்கும் நிறுவனம் – தன் தயாரிப்பு ஆலையை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது. இதன் மூலம் பத்தாயிரம் வேலை வாய்ப்பு இந்தியாவில் கிடைக்கும்.. இது போல் மேலும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்ற வாய்ப்பிருப்பதாக தகவல் வருகிறது.

சர்வதேச நாடுகளை குலை நடுங்க வைத்திருக்கும்ம் கொரோனா தொற்று மனித வர்க்கத் தையும் தாண்டி உலகளவிலான பொருளாதாரம் மற்றும் வணிகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளின் வணிக சந்தைகள் மாற்றத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் சீனா மீது அமெரிக்கா வைத்து வரும் குற்றச்சாட்டுதான் என்று சொன்னால் அது மிகையல்ல.

அதாவது சீனா தனது நாட்டில் ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை உரத்தக் குரலில் சொல்லி கட்டுப்படுத்த தவறியதாலேயே சகல நாடுகளும் பாதிக்கப் பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதே காரணத்திற்ககாக சீனாவுடனான வர்த்தக உறவுகளிலும் கட்டுப் பாடுகளை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியியேறி னால் சலுகைகள் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக உறவுகள் பிளவுபட்டுள்ளன. இந்நிலையில்தான் செல்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா, சீனாவில் உள்ள தனது உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள லாவா நிறுவனத்தின் தலைவர் ஹரி ஓம் ராவ், எங்கள் நிறுவனத்தின் செல்போன் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கு ஆவலாக உள்ளதாகவும் 6 மாதங்களில் நிறுவனத்தை மாற்றும் இந்த திட்டத்துக்கு முதல் கட்டமாக 80 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தங்கள் நிறுவனத்தை இடமாற்றம் செய்ய அளிக்கப்படும் சலுகைகள் உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாடுகளை போக்க உதவும் என்பதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் சர்வதேச சந்தையில் பல மாற்றங்கள் நிகழ்வதை காண்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த குழப்படியான சூழலை பயன்படுத்திக்கொள்ள இந்தியா மேலும் மேலும் முயன்று வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவும் பகிங்கர அழைப்பு விடுத்துள்ளதால் இன்னும் பல நிறுவனங்கள் இந்தியா வர வாய்ப்பிருக்கிறது.