சென்னை ஐகோர்ட்டில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை மூடப்படுகிறது!

சென்னை ஐகோர்ட்டில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை மூடப்படுகிறது!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து 500-க்கும் கீழ் கொண்டு வரப்பட்டது. எனவே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். பொது இடங்களில் முக கவசம் அணிவது மறந்து விட்டதால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொற்று அதிகரித்து வரும் சூழலில் சென்னை ஐகோர்ட்டுக்குள் மார்ச் 8-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 992 ஆக அதிகரித்துள்ளது. 3,954 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரையில் 12,513 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை யில் 2 லட்சத்து 30,487 பேர் குணமடைந்துள்ளனர். 12,513 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை வருகின்ற 8-ஆம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த மூடல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை Law Chambers மூடப்படுவதால் நாளை வரை அறைகளில் உள்ள தேவையான ஆவணங்களை எடுத்துக்கொள்ளும்படி வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் சில வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்பட்டாலும், நீதிமன்ற பணிகள் வழக்கம்போல செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை ஐகோர்ட்டுக்குள் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர மற்ற வழக்கறிஞர்களுக்கு அனுமதியில்லை. மற்ற வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 200 நாள்களுக்கு மேலாக இந்த Law Chambers மூடப்பட்டு இருந்தது. மத்திய, மாநில அரசு களின் ஊரடங்கு தளர்வு மற்றும் வழக்கறிஞர்களின் சங்கங்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து கடந்த வாரம் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!