சட்டமும் பட்டாக்கத்தியும்..!விஜய் சேதுபதி அப்பாடக்கரா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
பிரபல கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் பயோ பிக்சரில் நடிப்பதாக இருந்த நிலையில் கண்டனங்களுக்கு உடன்பட்டு அதிலிருந்து முரளியே விலக்கிவிட்டதாக தகவல் அளிக்கப்பட்டு உலகப் பிரபலமானார் மக்கள் செல்வன். இப்போது மீண்டும் ஒரு பின்வாங்கல். மாஸ்டர் படம் வி.சேயின் படம் அதில் ஏன் விஜய் நடித்தார் என்று பாராட்டுதல்களுக்கு திருஷ்டி வந்து விடக்கூடாது என்று அவரே முடிவு செய்து விட்டாரோ?
நடிகர் விஜய் சேதுபதி தனதுபிறந்தாள் கொண்டாட்டத்தின்போழுது பட்டகத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.அதற்கு வருத்தம் தெரிவித்தும் விட்டார் விஜய் சேதுபதி.
இதை கண்டித்து ஊடகவியாளரும் அரசியல் விமர்ச்சகரும் சீனிவாஸ் திவாரி வெகுண்டு எழுந்து தனது கண்டனத்தை வருத்தம் தெரிவித்து விஜய் சேதுபதி அறிக்கையிலேயே இப்படி தெரிவித்து இருக்கிறார். காவல் துறையினர் கவனத்திற்கு, இனி நண்பர் விஜய் சேதுபதி போல் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி இனி செய்யமாட்டேன் என்று அறிக்கை விட்டால் காவல்துறை மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாது என்று உத்திரவாதம் கொடுக்க வேண்டும். இதே போல் ஒரு டஜன் வழக்குகள் இருக்கிறது. அதன் நிலை என்னவாக இருக்கும் என்று காவல்துறையினர் விளக்கம் கொடுக்க வேண்டும்.
நன்றி
சீனிவாஸ் திவாரி
ஊடகவியாளர் | அரசியல் விமர்ச்சகர். என்று தெரிவித்து இருந்தார்
நாம் அவரை தொடர்பு கொண்டு ஏன் இப்படி பதிவு போட்டிருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு ,சீனிவாஸ் திவாரி அளித்த விளக்கம் இதோ:-
மிக அதிக அளவு followers கொண்ட முக்கிய நடிகர்களில் விஜய் சேதுபதி முக்கியமானவர். இதே போல் சம்பவம் பல முறை நடந்தேறியபொழுது எந்த ஒரு புகாரும் வராத சமயத்திலும் கூட கண்ணியமிக்க காவல்துறை நண்பர்கள் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து கைதும் செய்து உள்ளனர்.சமீபத்தில் தனது திருமணத்தில் பட்டகத்தியால கேக் வெட்டிய மணமகனை காவல் துறையினர் வலை வீசி தேடி கொண்டு இருக்கின்றனர். பிரபலங்களுக்கு ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் என்று நம் நாட்டில் இல்லை .ஒரே சட்டம் தான் உள்ளது. குற்றம் ஒன்று தான் ஆனால் நடவடிக்கையில் வேறுபாடுகள் ஏன் ? பிணையில் வர முடியாத வழக்காக இதை பதிவு செய்ய வேண்டும். அல்லது களத்தில் இறங்கி நடிகர் விஜய் சேதுபதி மீது காவல்துறையினரிடம் வழக்கு (புகார்) கொடுப்பேன்- என்று முடித்து கொண்டார்.