September 24, 2021

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் சாம்பார் சட்டி சலபுலஜங்குகளும்….!

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஐடி பொறியாளர் மாணவியின் கொலை என்பது ஒரு கொடூரமான நிகழ்வு. உடனே இது தான் சாக்குனு இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை /ஆளும் கட்சியின் அசால்ட்தனம் என தன் பங்குக்கு கட்சி பாகுபாடால் சரமாரிக்கு சலம்ப கொஞ்சம் அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங் ஏன் எவருக்கும் இல்லை என்பது தான் பிரச்சினை……………..அட்லீஸ்ட் நாமாவது ஆராய்வோம்……!

ravi june 25

முதல் உண்மை ரயில்வே என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் நிறுவனம். இங்கே சிசிடிவி வைப்பதும் வைக்காததும் ரயில்வே துறை அதிகராமே தவிர மாநில அரசின் அதிகாரம் அல்ல.

இரண்டாம் உண்மை – ஜி ஆர் பி மற்றும் ஆர் பி எஃப் போலீஸ் தான் இந்த ரயில்வே காம்பவுன்டில் காவல் காக்க வேண்டியது என்பது தெரிந்ததே.

மூன்றாம் உண்மை – அத்தனை பேர் இந்த கொலையை பார்த்தும் ஒருவர் கூட தடுக்கவோ அல்லது பிடிக்கவோ முனையவில்லை என்பது நம் முகத்தில் நாமே உமிழ வேண்டிய உண்மையான அசிங்கம்.

நான்காம் உண்மை – கூலி படைகள் சர்வ சாதாரணமாக நடக்க கூடிய அவலம் (சட்டம் ஒழுங்கின் மேல் இல்லாத பயமே)

ஐந்தாம் உண்மை – எந்த முதலமைச்சர் வந்தாலும் உடனே போலீஸ் / உள் துறையை தன் வசம் வைப்பதை விட ( நட்ராஜ் போன்ற) முன்னாள் போலீஸ் அதிகாரியாக உள்ள எம் எல் ஏவுக்கோ அல்லது நல்ல கட்டுப்பாட்டை கொடுக்கும் ஆக்டிவ் ஆட்களுக்கு இந்த போலீஸ் துறை மற்றும் உள் துறையை கொடுத்தால் நிறைய மாற்றம் ஏற்படலாம் என்பது என் கருத்து.

சட்டம் ஒழுங்கு மற்றும் தனி மனித குற்றம் இல்லாத நாடுகளே மிக குறைவு ஏன் என்றால் உலகத்தின் அதி நவீன போலீஸ் மற்றும் நெ1 எனப்படும் ஸ்காட்லாந்து போலீஸ் மற்றூம் எம் 6 உளவு நிறுவனத்தை கொண்ட பிரிட்டனின் எம்பி ஜோ காக்ஸ் அதுவும் பெண் எம்பியை போன வாரம் மதியம் 1 மணிக்கு குத்தி கொலை செய்யபட்ட சம்பவத்திர்க்கும் இதற்க்கு அதிக வித்தியாசம் இல்லை ஆனால் அங்கு தள்ளாத வயதான ஒரு 77 வயது ஆம்பிளை இதை தடுக்க முனைந்து தானும் அந்த தாக்குதலுக்கு ஆளாகி இன்னும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு மனிதத்தனம் கூட இங்கு இல்லை என்பது வெட்கக்கேடு –

ஆக.. அடுத்தவரை குறை கூறும் முன்பு நாமும் ஏதாவது இதற்க்கு செய்திருக்கிறோமா என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம். குடி ஆகட்டும் குடியை கெடுக்கும் கொலை ஆகட்டும் அதை செய்யும் முன் அல்லது அதை தடுக்க முனையாமல் அல்லது மனித பொறுப்புணர்வு இல்லாத வரை இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை பற்றி பேசும் அனைவரும் சாம்பார் சட்டிகளே……!