வேலையை விட்டு நீக்கமா? சம்பளம் குறைப்பா? இதோ உங்களுக்கான வழிகாட்டி ரிப்போர்ட்
நடப்பு ஊரடங்குக் காலகட்டத்தில் எந்தவொரு ஊழியரையும் வேலையை விட்டு விலக்கபட மாட்டார் என்று பிரதமரின் தெளிவான அறிவிப்பு இருந்தபோதிலும், பல ஊடக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பெரிய அளவில் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன என்பது மிகுந்த கவலையும் கவலையும் அளிக்கிறது. உலக அளவில் பிரபலமான பென்னட் கோல்மேன் மற்றும் கம்பெனி போன்ற பெரிய ஊடகங்கள் கூட அதன் சண்டே இதழின் தலையங்க பொறுப்பாளர் களை சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் பணிநீக்கம் செய்துள்ளன என்பது கவனத்திற்கு வந்துள்ளது. மற்றொரு மதிப்புமிக்க செய்தி நிறுவனமான ‘அவுட்லுக்’ அச்சு வெளியீட்டின் பணி களை முற்றிலுமாக நிறுத்தி விட்டது. ஆடியோவிஷுவல் மீடியா ஹவுஸ்-ஸான நியூஸ் நேஷன் ஒரு டஜன் டிஜிட்டல் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. COVID-19 காரணமாக ஏற்பட்ட நெருக்கடி யின் கீழ் ஊழியர்கள் வெளியேற்றப்படும் பல ஊடக நிறுவனங்களிலிருந்தும் இதேபோன்ற குழப்பமான அறிக்கைகள் வந்துள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று மற்றும் அதனை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக எழும் பிரச்சினைகளால், மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் கீழ் 20 கட்டுபாட்டு அறைகளை இந்தியா முழுவதும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைத்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 19லட்சத்து 36ஆயிரத்து 700பேர் உயிரிழந்து உள்ளனர். அதில் 4 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதையொட்டி பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தியுள்ளதால் சகல தொழில்களும், தொழிலாளர்களும் முடங்கிப் போய் உள்ளனர். இச்சூழலை பயன்படுத்தி பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி யிலிருந்து நீக்குதல், சம்பளத்தை குறைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் மோடி அரசின் மத்திய மண்டலத்தில் பணியிலுள்ள தொழிலாளர் களின் ஊதியம் தொடர்பான குறைகளைக் களைவது, பல்வேறு மாநில அரசுகளோடு ஒன்றிணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்தல் போன்றவற்றை தீர்க்க கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொலைபேசி எண்கள், வாட்ஸ் அப், மற்றும் மின்னஞ்சல்களின் மூலம் தொழிலாளர்கள் இந்த அழைப்பு மையங்களை தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள தொழிலாளர் அமலாக்க அலுவலர்கள், உதவி தொழிலாளர் ஆணையர்கள், மண்டல தொழிலாளர் ஆணையர் கள் மற்றும் துணை தலைமை தொழிலாளர் ஆணையர்கள் ஆகியோரால் இந்த கட்டுப்பாட்டு அறைகள் நிர்வகிக்கப்படுகின்றன. மத்திய தலைமையிட தலைமை தொழிலாளர் ஆணையரால் இந்த 20 அழைப்பு மையங்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு மேற்பார்வையிடப் படுகின்றன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களின் விவரங்கள், தொழிலாளர் கள் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
பெயர் பதவி மின்னஞ்சல் முகவரி செல்போன் எண்
வி.எம். மாணிக்கம் DY CLC(C) support-dylcchn@nic.in 9677112646
அண்ணாதுரை RLC(C) support-dylcchn@nic.in 9884576490
பி. மோகன்தாஸ் ALC(C) support-dylcchn@nic.in 9272927808
ராமானந்த் யாதவ் LEO(C) support-dylcchn@nic.in