April 13, 2021

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் மாணவர் சேர்க்கை!

த்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம்.. நாடு முழுவதும் 1247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு குடும்ப வருமானம் ரூ 8லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் OBC- NCL எனும் கோட்டாவிலும் ,ஒரே பெண் குழந்தை மட்டும் உள்ளவர்கள் SGC எனும் கோட்டாவிலும் விண்ணப்பிக்கலாம். RTE எனப்படும் கட்டாய கல்வி சட்டப்படி கோட்டாவில் விண்ணப்பிக்கும் மேலும் சீட் கிடைக்கும் பட்சத்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கலாம்

இதை ஒட்டி ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும்.

2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின் படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.