October 17, 2021

குற்றம் 23 – திரை விமர்சனம்

பிரமாண்ட இயக்குநர் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு அவர் தயாரிப்பு நிறுவனத்தாலயே இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுக செய்து வைக்கபட்டவர் இயக்குநர் அறிவழகன், தன் குருநாதரின் பெயரை எந்த சந்தர்ப்பத்திலும் கெடுத்து விட கூடாது என்ற வெறியுடன் போராடி வருபவர், தன் முதல் படத்திலேயே சமீபகால சீஸனாக இருக்கும் பேய் கதையையும் போலீஸ் கதையையும் மையமாக வைத்து ‘ஈரம்’ திரைப்படம் மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அதன் பின் நடிகர் நகுலை வைத்து வல்லினம், நடிகர் அருள்நிதியை வைத்து ஆறாது சினம் என்ற திரைப்படங்களை இயக்கினாலும் தற்போது வெளிவந்துள்ள குற்றம் 23. இதில் போலீஸ், ஆண்களின் மலட்டுத் தன்மை, செயற்கையாக கருத்தரித்தல் என்ற நவீன கால மருத்துவ வளர்ச்சி என்று நடப்பு மருத்துவ போக்கை வைத்து யதார்தமான த்ரில்லர் படம் எடுத்து ரசிகர்களை திருப்தி அடைய வைத்துள்ளார்.

kutram mar 3

உலகளவில் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது, இதோடு இது நிற்காமல் பெரும் பாலானோருக்கு மனநில பதிப்புகள், மன அழுத்தம், பை-போலார் குறைபாடு போன்றவை எழ காரணமாக இருக்கிறதாம். இது போன்ற பல காரணங்களினால் ஆண்களின் விந்தணு திறன் மிக விரைவாக குறைந்துவிடுகிறது என கூறப்படுகிறது. இதனால்,இப்போதே பல நாடுகளில் இரத்த வங்கியை போல, விந்தணு சேமிப்பு வங்கிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், விந்தணு குறைபாடு உள்ளவர்கள் குழந்தை பேறு அடைய வாய்ப்புகள் இருக்கின்றன.

இதனிடையே உலகளாவிய ரீதியல் 100க்குப் 10 சதவிகிதமான தம்பதிகள் குழந்தைகளின்றி மனஅவதிக்கு ஆளாகியுள்ளனர். எவ்வளவுதான் முயற்சித்தாலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியவில்லை. ‘மலடன் மலடி’ எனச் சுற்றி இருப்பவர்கள் அவர்களை முதுக்குப் பின்னாலாவது இழிவுபடுத்துகிறார்கள்.விஞ்ஞானம் முன்னேறி மலட்டுத்தன்மைக்கான சிகிச்சைகள் அற்புதமாக வளர்ச்சி அடைந்துவிட்டபோதும் இந்த மருத்துவ வளர்ச்சியை எப்படி வியாபாரமாக மாற்றுகிறார்கள், அதன் பின் நடக்கூடிய பிளாக் மெயில், பண பறிப்பு, கொலை, போன்ற காட்சிகளை மிகச்சரியாக கையாண்டுள்ளார் இயக்குநர்.

கதைப்படி, போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் அருண்விஜய், ஒரு சர்ச் பாதிரியாரும், அவரிடம் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம் பெண்ணும் சேர்த்து கொலை செய்யப்பட்ட கேஸில் துப்பு துலக்கும் அருண்விஜய்க்கு, ஐ விட்னஸாக மாட்டுகிறார் மழலை பள்ளி ஆசிரியை மஹிமா.அவருடன், அருண் விஜய்க்கு காரணக் காதல் ஏற்படும் நிலையில், கதாநாயகி மஹிமாவை ஒரு கும்பல் போட்டுத் தள்ள துரத்த, அவர்களை விரட்டியடிக்கிறார் அருண் விஜய்.இந்நிலையில், அடுத்தடுத்து, அருணின் அண்ணி உள்ளிட்ட நகரில் கொஞ்சம் வசதி படைத்த இளம் கர்ப்பிணி பெண்களின் கொலையும், தற்கொலையும்.., நடக்க இப்படி கர்ப்பிணி இளம் பெண்கள் கொலைக்கு காரணம் என்ன? பின்னணி என்ன? என்ற வினா(க்களு)க்கு சலிப்பில்லாமல் பதில் சொல்கிறது இப்படம்.
அருண் விஜய் நாயகனுக்குரிய அழகு, நடிப்பு, திறமை எல்லாம் இருந்தும் ஹிட் ஹீரோ என்ற அந்தஸ்தை அடையாதவர் – இப்படத்தில் அதை நோக்கி நகர எத்தனித்துள்ளார்

“ஜீசஸ், காந்தி, சேகுவாரா…. எல்லாம், இப்ப, யூத்துக்கு பேஷன் சிம்பல்ஸ் இல்லே… ” என்று இந்த கால யூத்களின் போக்கை சுட்டி காட்டுவதாகட்டும், “குழந்தை பிறக்க ஆண் பெண் உறவு எல்லாம் தேவை இல்லை.. ஆணின் விந்தணுவில் இருந்து 23 குரோமோசோமும், பெண்ணின கரு முட டையில் இருந்து 23 குரோமோசோமும் போதும்|” என்று நெடிய விஞ்ஞானத்தை சிம்பிளாக சொல்வதாகட்டும் “போலீஸ் ஆபிஸர்கிட்ட உண்மையை சொல்லனும்னு அவசியம் இல்ல… ஆனா, புடிச்சவங்க கிட்ட உண்மையைதான் சொல்லணும்.. ” என்றபடி தன் லவ்வை எக்ஸ்போஸ் செய்வதாகட்டும் வசனங்கள் மனசில் அப்ளாஸ் அடிக்க வைக்கிறது.

ஆனால் கதையின் வில்லனுக்குரிய பின்னணி கொஞ்சம் ஒட்டாமல் இருப்பதும், ஒரே நேர் கோட்டில் திரைக்கதையை வடிவமைத்திருப்பதால் த்ரில்லர் படத்துக்குரிய ட்விஸ்ட் இல்லாததும் மைன்ஸ்தான்.

மேலும்  செயற்கை  கருத்தரிப்பு என்பது அறிவியலின் ஒரு நல்ல கண்டு பிடிப்பு. அது இந்தியா வந்து 25 ஆண்டுக்கு மேலாகிறது; தற்போது அதனை  ‘வெரி பேட்’  என்று  எண்ண வைக்கின்றன  பல காட்சிகள் ! இன்னும் கொஞ்சம் ஆழமாக இதனை கையாண்டிருக்கலாம். அத்துடன் ஹைட்டெக்கான விந்தணு வங்கியில் ஜஸ்ட் லைக் தட் தன் விந்தணு வைப்பது போலவும், அதை கண்டு பிடித்த டாக்டர்களை கேஷூவலாக மர்டர் செயவதும் நம்பும்படியாக இல்லை. போலீஸ் – அதிலும் அசிஸ்டெண்ட் கமிஷனர் எப்போதும் போலீஸாக இருப்பது கொஞ்சம் பார்ப்பவர்களையும் இறுக்கமாக்குகிறது.

எல்லாம் முடிந்த பிறகு ஹீரோ சொல்கிறார் ” குழந்தை இல்லை இல்லைன்னு எத்தனையோ பேர் சொல்றாங்க; இன்னொரு பக்கம் எத்தனை அநாதை குழந்தைகள் இருக்கு !!” என்ற  ஃபீலிங்கிற்கு பதில் சொல்லும் விதமாக ’பெற்றெடுப்பது மட்டுமல்ல.. தத்தெடுப்பதும் தாய்மைதான்’ என்ற மெசெஜ் நச்.

மொத்தத்தில் நீணட காலத்திற்கு பின்னர் ஃபேமிலியுடன் ஒரு முறை பார்க்க தக்க கிரைம் த்ரில்லர் படமிது