January 30, 2023

உள்ளது உள்ளபடி சொல்லும் `குரூப்’: கேரளாவை உலுக்கிய இன்சூரன்ஸ் கொலையின் நிஜக் கதை!

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்த படம் குரூப், நேற்று வெளியானது. இந்திரஜித் சுகுமாறன், ஷோபிதா துலிபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். இப்படம் கேரளா போலீஸ் மற்றும் சர்வதே போலீஸ் அமைப்பான இண்டர்போல் ஆகியவற்றால் 1984ம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்குது.இப்படத்தை தடைவிதிக்க வேண்டும் என்று கொச்சியை சேர்ந்த செபின் தாமஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட் படத்திற்கு தடைவிதிக்க மறுத்துடுச்சு. இதை அடுத்து இது பத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்கும் நம்ம கட்டிங் கண்ணையாவிடம் இந்த குரூப் நிஜக் கதை என்ன? -அப்படீன்னு கேட்டத்துக்கு அனுப்பி இருக்கும் முழு உண்மைக் கதை நம்ம ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழுவுக்காக இதோ:

ஏகப்பட்ட மர்மங்கள் இன்னிவரைக்கும் நிறைஞ்ச சுகுமார குரூப்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாக் கொண்டுதான் `குரூப்’ அப்படீங்கற சினிமாவை ஸ்ரீநாத் ராஜேந்திரன் தயாரிச்சிருக்கர். துல்கர் சல்மான் ஹீரோவா நடிச்சிருக்கார். ஆனால் டைட்டில் ரோலி வரும் சுகுமார குரூப்பால் கொலை செய்யப்பட்ட சாக்கோ என்பவரின் பேமிலி இந்த படத்துக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு தெரிவிச்சாய்ங்கர். “ஒரு கிரிமினல் ப்ரெய்ன் கொண்ட கொலைகாரனை ஹீரோவாக காட்டபடாது” அப்ப்டீன்னு சாக்கோவின் ஒய்ப் சாந்தம்மா, மகன் ஜிதின் ஆகியோர் தெரிவிச்சாய்ங்க. இதையடுத்து போன வருசமே இந்த குரூப் படம் சாக்கோவின் ஃபேமிலிக்கு மட்டும் ஸ்கீரினில் காட்டப்பட்டது. அதை அடுத்து அவிய்ங்க ஆஃப் ஆயிட்டாய்ங்க

இப்போது ஒலகமெங்கும் ரிலீஸான நிலையில் வயக்கம் போல் சோஷியல் மீடியாவில் குரூப் சினிமாவுக்கு ஆதரவாவும், எதிராகம் கமெண்ட்ஸ் நடக்கிறது. ‘குரூப்’ சினிமாவை கலையாக பார்க்க வேண்டும் என்று ஆதரவாக ஒரு தரப்பினரும், கொலைக்காரனுக்கு ஆதரவான படம் என எதிப்பாக மற்றொரு தரப்பினரும் ஏதேதோ சொல்லி படம் குறிச்ச எதிர்ப்பார்ப்பை எகிற வச்சிக்கிட்டு இருக்காய்ங்க

அதெல்லாம் சரி.. ரியல் ஸ்டோரி என்னா-ன்னு கேக்கறீங்களா? இதோ:

நம் ட்ரேட் நேமான ஆந்தை என்ற பெயரில் ஜூ.வி-யில் ராத்திரி ரவுண்ட் அப் எழுதிய வாசகங்களை சென்னை, திருச்சி, கோவை & மதுரையின் முக்கிய ஸ்தலங்களில் கட் அவுட்டில் பொறிக்கப்ப்பட்டுக் கொண்டிருந்த 1984-ம் ஆண்டில் நடந்த நிகழ்வு அது.. அந்தாண்டு ஜனவரி மாசம் 22-ம் தேதி எரிலி மார்னிங் கேரளா மாவேலிக்கரை – செங்கன்னூர் சாலையை ஒட்டிய வயல் வெளியில் ஒரு கார் தீப்பிடிச்சு எரிஞ்சுக்கிட்டிருந்துச்சாம். அப்பகுதியினர் அதுபற்றி உடனடியாக போலீஸூக்கு தகவல் தெரிவிச்சாய்ங்க. போலீஸ் ஸ்பாட்டுக்கு வந்து லோக்கல் ஜனங்களோட உதவியோட தீயை அணைச்சாய்ங்க. அப்போ காருக்குள் எரிஞ்ச நிலையில் அடையாளம் தெரியாத ஒரு உடல் கிடந்துச்சு. அந்த பாடியை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைச்சாய்ங்க. இதுக்கிடையிலே போலீஸ் என்கொயரி நடத்தியபோது எரிஞ்ச கார் பாஸ்கர பிள்ளை அப்படீங்கரவருக்குச் சொந்தமானதுன்னு தெரியவந்துச்சு. அந்த பாஸ்கரபிள்ளைகிட்டே விசாரிச்ச போது அட.. ஆமாங்க அந்த கார் என்னுடையது -ன்னு ஒப்புக்கிட்டடார். கூடவே காரில் இறந்து கிடந்தது தன்னோட மச்சான் சுகுமார குரூப் அப்படீன்னும் சொன்னார் பாஸ்கரபிள்ளை.

ஆனால் போஸ்ட் மார்டத்தில் அது சுகுமார குரூப்பின் உடல் இல்லை அப்ப்டீன்னு தெரிய வந்துச்சாம். இதையடுத்து காரின் உரிமையாளர் என்ற முறையில் பாஸ்கர பிள்ளையை மறுபடியும் ஸ்டேசனுக்கு கூப்பிட்டு போலீஸார் விசாரணை நடத்தினப்போ பாஸ்கர பிள்ளையோட உடம்புலே ஆங்காங்கே தீ காயங்கள் இருந்ததை போலீஸார் கவனிச்சிட்டாய்ங்க. அது மட்டுமல்லாம, அவரோட வீட்டுக்கு போய் பார்த்த போது ஆக்சிடெண்டில் இறந்தவரின் வீடு மாதிரி இல்லாம இருந்துச்சு. இதை எல்லாம் தாண்டி கார் தீப்பிடிச்சு எரிஞ்ச எடத்தில் ஒரு கை உறையை (கிளவுஸ்) போலீஸார் கைப்பற்றினாய்ங்க.

இது ஒரு பக்கம் தெரிய வரும் சூழலில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவரோட மூச்சுக் குழாய்க்குள் தீ எரிந்த புகை செல்லலை, அதுனாலே கார் எரியதற்கு முன்னாடியே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அப்ப்டீன்னு தெரிய வந்துச்சு.
இது போதாதா? போலீஸ் அப்பப்போ நிஜமாவே துப்பறிவதும் உண்டுதானே?.

இச்சூழ்நிலையில் கார் எரிஞ்ச சம்பவத்துக்கு ரெண்டு நாள் ஆஃன் நிலையில் ஆலப்புழாவில் உள்ள ஹரிப்பாடு போலீஸ் ஸ்டேசனில் மேன் மிஸ்ஸிங் கேஸ் ஒன்று பதிவாச்சாம். ஃபிலிம் ரெப்ரெசென்டண்டேடிவ் -ஆக இருந்த சாக்கோ அப்ப்டீங்கற காணலை -ன்னு அவரோட ரிலேட்டிவ் புகாரளிச்சாய்ங்க. இதையடுத்து விசாரணை நடத்தினப்போ மேற்படி காரில் இருந்து மீட்கப்பட்ட உடல் சாக்கோவினுடையது அப்படீன்னு கண்டறியப்பட்டுச்சு.

இதை அடுத்து சாக்கோவின் உடல் பாஸ்கர பிள்ளையின் காரில் வந்தது எப்படி, அவரைக் கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுச்சு. இப்போ போலீஸார் தங்களோட பாணியிலே பாஸ்கர பிள்ளைகிட்டே விசாரணை நடத்தினாய்ங்க. அப்போ அவர் சொன்ன தகவல்கள்தான் ஒட்டு மொத்த கேரளத்தையே அதிர்வடைய வச்சிடுச்சு. பாஸ்கர பிள்ளையின் வாக்குமூலம் இதுதான்.

பாஸ்கர பிள்ளையின் மைத்துனர் சுகுமான குரூப் அபுதாபியில் மனைவியுடன் வசிச்சு வந்தார். அவரோட மனைவிக்கு நர்ஸ் வேலை. இதற்கிடையே திடீர் பணக்காரன் ஆக வேண்டும் என யோசிச்சிருகார் சுகுமார குரூப். அதுக்காக அபுதாபியில் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் மூன்று லட்சம் திர்ஹம் ரிட்டன் பணம் மனைவிக்கு கிடைக்கும் வகையில் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார் சுகுமார குரூப். இனி தான் இறந்ததாக இன்சூரன்ஸ் கம்பெனியை நம்ப வைத்தால் அந்த பணம் மனைவிக்கு கிடைக்கும். பின்னர் அந்த பணத்தில் நினைத்த வாழ்க்கை வாழலாம் என கணக்குப் போட்டிருக்கிறார்.

அந்த திட்டதை தான் மட்டும் நிறைவேற்ற வழியில்லை என்பதால் கேரளா வந்த அவர் தனது மைத்துனர் பாஸ்கர பிள்ளை, அபுதாபியில் தன்னுடன் வேலை செய்த நம்பிக்கைக்குரிய நண்பன் சாகு, டிரைவர் பொன்னப்பன் ஆகியோர் உதவியோடு இந்த திட்டத்தை அரங்கேற்றும் படலத்தில் இறங்கினார். தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரது உடலைக் காட்டி, தான் இறந்துவிட்டதாக நம்ப வைக்கலாம் என முதலில் திட்டம் போட்டனர். அதற்காக 1984-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி ஆலப்புழா மெடிக்கல் காலேஜில் சென்று ஒரு உடலை திருடுவதற்காக முயன்றாய்ங்க. அது வெற்றி பெறலை. அதுனாலே தன்னைப் மாதிர்யே சாயல் கொண்ட ஒரு ஆசாமியை கண்டு பிடிச்சு கொலை செஞ்சே ஆகோணும் -அப்படீன்னு முடிவு செஞ்சு இரண்டு கார்களில் ஆலப்புழா நேஷனல் ஹைவேஸூல் போற வார ஆட்களில் சாக வைக்க ஆள் தேடியிருக்காய்ன்க. இதுக்காகவே நைட்-டில் ஆந்தைக்கு போட்டியா அதிக தூரம் ரெண்டு கார்களில் அங்குமிங்கிம் அலிஞ்சாய்ங்க. ஆனாலும் சுகுமார குரூப்பைப் போல ஒரு ஆள் கிடைக்கலை. இதனால்ர்ர் அவர்கள் வீட்டுக்குக் காரைத் திருப்பி வீட்டுக்கு வரும் வழியில் ஒரு ஆசாமி இவிய்ங்க காரை நோக்கி கை காட்டி லிப்ட் கேட்டார். நைட் என்பதால் அவர் மேற்படி சுகுமார குரூப்பைப் போல இருந்ததால் உடனே அவருக்கு லிப்ட் கொடுத்தாய்ங்க. காரில் ஏறிய அவர் தன் பெயர் சாக்கோ என்றும், பிலிம் ரெப்ரசென்டேட்டிவாக இருப்பதாகவும், வீட்டுக்குப் போவதற்காக வண்டிக்குக் காத்திருந்ததாகவும் தெரிவிச்சிருக்கார்.

ஆனா அந்த சாக்கோ சுகுமார குரூப்பைப் போல இருந்ததால் அவரையே கொலை செய்யத் திட்டமிட்டு. காரில் போய் கொண்டிருக்கும் போதே `சரக்கு அடிக்கிறீங்களா?’ அப்படீன்னு கேட்டிருக்கிறார்கள். சாக்கோ வேண்டாம் அப்ப்டீன்னு சொன்ன நிலையிலும் வலுக்கட்டாயமாக மயக்க மருந்து கலந்த மதுவை சாக்கோவுக்கு கொடுத்துட்டாய்ங்க சாக்கோ மயக்க நிலைக்கு சென்ற உடனே பாஸ்கர பிள்ளை துண்டைக் கொண்டு (டவல்) சாக்கோவின் கழுத்தை இறுக்கிக் கொலை செஞ்சிருக்கார். அப்பாலே சாக்கோவின் டெட் பாடியை சுகுமார குரூப்பின் (ஒய்ப்)வீட்டுக்கு கொண்டு சென்று. சாக்கோவின் பாடிக்கு சுகுமார குரூப்பின் ட்ரெஸை மாட்டி விட்டாய்ங்க.

இதை எல்லாம் செஞ்ச பொறகு அவரது உடலை எங்கு போடலாம் என யோசித்தபடி பாடியை வச்சிக்கிட்டு ரெண்டு கார்களில் அங்கே-இங்கே- எங்கே எல்லாமோ அலைஞ்சாய்ங்க. அப்படி மாவேலிக்கரை -செங்கன்னூர் ரோடு முக்கில் காரை நிப்பட்டி, டிரைவர் இருக்கையில் சாக்கோவின் உடலை வைச்சாய்ங்க. அதை அடுத்து பாடி உள்ள காரை வயல்லெ தள்ளிட்டு, பெட்ரோல் ஊத்தி தீ வைச்சு எரிச்சிருக்கிறார்கள். அப்போ அவர்கள் எதிர்பார்த்த விட வேகமாக பற்றியதால் பாஸ்கர பிள்ளையின் உடம்புலே தீக்காயங்கள் ஏற்பட்டுச்சு .அந்த தீக்காயத்தை அணைக்க முற்பட்டபோது பாஸ்கர பிள்ளையின் கையிலிருந்த கிளவுஸ் கழன்று கீழே விழுந்திருக்கிறது. அதுதான் போலீஸுக்குத் துருப்புச்சீட்டா அமைஞ்சிடுச்சு. அப்பாலே சாகு, டிரைவர் பொன்னப்பன் ஆகியோரைப் பிடித்து விசாரிச்ச சூழலில். சாகு அப்ரூவராக மாறிட்டார்.இதை அடுத்து பாஸ்கரபிள்ளை, டிரைவர் பொன்னப்பன் ஆகியோரை போலீஸார் கைது செஞ்சாய்ங்க. அவங்களுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிச்சிடுச்சு.

ஆனால், இந்த சாக்கோ கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சுகுமார குரூப் எங்கே சென்றார் என போலீஸால் கண்டுபிடிக்க முடியலை. 1989 மார்ச் 2-ம் தேதி மாவேலிக்கரை ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டு சுகுமார குரூப்புக்கு எதிராக அரஸ்ட் வாரண்ட் பிறப்பிச்சிருக்குதுது. ஆனாலும் இன்னி வரை அவரைப் பற்றிய விவரம் கிடைக்கலை.

தான் இறந்ததாக விமானப்படையையே ஏமாற்றியிருக்கிறார் சுகுமார குரூப். அவரது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன் குரூப் எனவும், ப்ரீ டிகிரி தோல்வி அடைந்த நிலையில் விமான படையில் பணிக்கு சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு பணி செய்ய முடியாததால் ஊருக்கு வந்தவர் தான் மரணம் அடைந்துவிட்டதாக போலி டாக்குமெண்ட் தயாரித்து விமானப்படைக்கு அனுப்பியிருக்கிறார். அதன் பின்னர்தான் கோபாலகிருஷ்ணன் குரூப் என்ற தனது பெயரை சுகுமார குரூப் என மாற்றிக் கொண்டார் என்கிறார்கள்.

படிக்கும் போதே சுவாரஸ்யமா இருக்கும் இந்த கதையை சினிமா-வா பண்ணி இருக்கார் என்பதே நிஜம்