January 27, 2023

வரப் போகுது குமுதம் (ஒரிஜினல் எக்ஸ் டீம் கைவண்ணத்தில் உருவான) @Wow தமிழா!

ழைய ராமநாதபுரம் ஜில்லா தற்போது சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை செட்டியார் அவருக்கு சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதி வேட்டைக்காரன் சாலை சொத்துகள் மட்டுமே அப்போதய மதிப்பு பலகோடியாகும், அப்பேர்பட்டவரின் சொந்த முதலீட்டில் தொடங்கியது தான் குமுதம் பத்திரிகை இப்போது அந்த குமுதம் பத்திரிகையில் தரமற்ற செய்திகள், சினிமாவுக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் போன்றவை கடும் விமர்சனங்களுக்கு ஆளானாலும், குமுதம் தமிழகத்தின் இன்னிக்கு வரை தனக்கென ஒரு இடத்தை பிடித்தது என்பதும், இப்போதும் தமிழ் இதழியலில் வெற்றிகரமாக நடந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதை இத்தகைய வெற்றிப் பத்திரிகையாக ஆக்கிய பெருமை இருவரைச் சேரும். ஒருவர் எஸ்.ஏ.பி என்று அழைக்கப் படும் எஸ்.ஏ.பி.அண்ணாமலை. மற்றொருவர், பிவிபி என்று அழைக்கப் படும் பி.வி.பார்த்தசாரதி. அண்ணாமலை எழுத்து தொடர்பான விவகாரங்களை பார்த்துக் கொள்வார். பார்த்தசாரதி வியாபாரம் தொடர்பான விவகாரங்களை பார்த்துக் கொள்வார்.

பிவிபி, காலையில் வாசலில் 9 மணிக்கு அமர்ந்து கொள்வார். அதற்கு மேல் தாமதமாக அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு கடும் டோஸ் கிடைக்கும். ஊழியர்களுக்கு இலவசமாக மதிய உணவு உண்டு. சென்னை அயனாவரத்தில் ஊழியர்களுக்காக குடியிருப்பு கட்டிக் கொடுத்த ஒரே ஊடக நிறுவனம், குமுதம் தான். இதை எல்லாம் செய்தது பார்த்தசாரதியாக்கும்

குமுதம் இதழ் வெளிவரும் நாட்களில் எஸ் ஏ பி காலை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை மின்சார ரயிலில் செல்லுவார். குமுதம் யாராவது படித்துக் கொண்டிருந்தால், அவர் அருகில் அமர்ந்து கொண்டு, எந்தப் பக்கத்தை முதலில் படிக்கிறார். எந்தப் பக்கத்தை தவிர்க்கிறார் என்பதை கவனிப்பார். ஏதாவது ஒரு தொடரை நிறைய பேர் படிக்காமல் தவிர்ப்பதை கவனித்தால், அடுத்த வாரமே, அந்தத் தொடர் நிறுத்தப் படும்.

அதே சமயம் பிவிபி, எஸ்ஏபி இருவரின் நட்பு என்பது, பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு போன்றது. ஈகோவுக்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் நெருக்கமான நட்பு பாராட்டி, குமுதத்தை மிகப் பிரம்மாண்டமான நிறுவனமாக வளர்த்தவர்கள். இப்படி உழைத்து உழைத்து உருவாக்கியதுதான் குமுதம் குழுமம்.

அந்த இரட்டையர் எஸ்ஏபி, பிவிபிக்கு பிறகு, அடுத்த தலைமுறையிடம் குமுதம் இதழ் ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற சூழலில், யார் பொறுப்பேற்பது என்று கேள்வி வருகிறது. எஸ்ஏபி ன் மகன் ஜவஹர் பழனியப்பன், அமேரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் இதய மருத்தவராக பணி புரிகிறார். அமெரிக்காவில் இவர் மிகப் பிரபலமான இதய மருத்துவர். அமேரிக்க குடியுரிமை பெற்றவர். இவருக்கு, மருத்துவர் தொழிலை விட்டு விட்டு, இந்தியாவுக்கு வந்து பத்திரிக்கை நடத்த விருப்பமில்லை. அதனால், பிவிபியின் மகன் வரதராஜனிடம் பொறுப்பை ஒப்படைக்க தனது முழு சம்மதத்தையும் தெரிவிக்கிறார். வரதராஜன் அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர். அவருக்கும் இந்தியாவுக்கு வந்து பத்திரிகை தொழிலை ஏற்க விருப்பமில்லை. இருப்பினும், வேறு வழியின்றி, தயக்கத்தோடே இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், குமுதத்தை விரிவு படுத்துகிறார். சிநேகிதி, தீராநதி, ஜோதிடம், பக்தி என்று புதிய இதழ்களை கொண்டு வருகிறார். இது போல, பல்வேறு புதிய இதழ்களை துவக்கி, விகடன் குழுமம் போலவே, குமுதத்தை ஒரு நிறுவனமாக மாற்றுகிறார்.. காலப் போக்கில் எடிட்டோரியலில் தலையிட்டு தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். ஆனாலும் பலவற்றில் தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொண்டார். அப்படியான உள்ளடி வேலைகள் வேலைகள் எஸ் பி பி வீட்டம்மா கோதை ஆச்சி வழியாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பார்வைக்கு சென்றதும் அவர் கணக்கு & நடப்பு விபரம் கேட்கவே விவகாரம் வெடித்து சிதரியது.

பிரச்னையை சமூக, அரசியல் ரீதியாகவும் இந்து ராம் உள்ளிட்ட பெரியவர்(?)கள் பலர் சமாதானம் பேசினார்கள். உடன்பாடு ஏற்பட்டது. ரிப்போர்ட்டர், சிநேகிதி வரதராஜனுக்கு, குமுதம் உள்ளிட்ட பிற 7 ம் ஜவஹருக்கு. இருவரும் கையெழுத்து போட்டனர். பிரிந்து செல்ல கெடு நெருங்கியதும் வரதராஜன் மனம் மாறி ஒப்பந்தம் செல்லாது என்றார். கையெழுத்து போட நிர்பந்தம் காரணம் என்றார். அதோடு நிற்கவில்லை. இந்தியாவில் பூர்வமான மகுட தன வைசியர் குடியில் தமிழகத்தில் பிறந்தவரை வெளிநாட்டு பிரஜையானவர் ஜவஹர் என்றும் இந்திய பத்திரிகைக் கம்பெனியில் பங்குகள் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை; ஆகவே குமுதத்தில் அவருக்கு உரிமை இல்லை என்றார்.

அதை ரிசர்வ் வங்கி கம்பெனி லா போர்டு விசாரிக்க டாக்டர் ஜவஹர் வெளிநாட்டு பிரஜை ஆனபிறகு குமுதம் பங்குகளை வாங்கவில்லை; வாரிசு என்ற முறையில் பூர்வீகமாகக் கிடைத்த பங்குகளை வைத்திருக்க அவருக்கு உரிமை உண்டு எனத் தீர்ப்பு வழங்கின. வரதராஜன் விடவில்லை. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்டை – ஈடி – அதாவது அமலாக்கத்துறை, உள்ளிட்டவைகளை அணுகினார். அதிலும். அவரது முயற்சிகள் எல்லாம் தோற்று, டாக்டர் ஜவஹருக்கே சகல உரிமைகள் என்றாகின .

முன்னரே சொன்ன எஸ் ஏ பி-க்கு கோதை ஆச்சியும் டாக்டர் ஜவகருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். சகோதரியான கிருஷ்ணா மெய்யம்மை ஒரு எழுத்தாளரும் கூட. சில காலம் எடிட்டோரியல் பொறுப்பைக் கவனித்த அனுபவமும் உண்டு. அவரும் அவரது தாயார் கோதை ஆச்சியும் குமுதம் வளாகத்துக்குள் நுழைய முடியாதவாறு கெடுபிடிக் காட்சிகள் வரதராஜனால் அப்போது அரங்கேற்றப்பட்டதை நாடே அறியும்

1947 தொடங்கப்பட்டு எழுபத்து ஐந்து வயதைத் தொடப் போகும் பத்திரிகை தொலைக்காட்சி இல்லாத காலக் குமுதம், ஒரு பொக்கிஷம் பலரும் அறிவார்கள் டாக்டர் ஜவஹர் தலைமையில் அடுத்த அத்தியாயத்தை இளமைத் துடிப்புடன் தொடங்கும் .. அந்த குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கட்டுப்பாட்டை டாக்டர் ஜவகர் பழனியப்பன் ஏற்பார் .. இனி சில பல ஊழியர்களுக்கு நல்ல வாழ்க்கைக் கிடைக்கப் போகுது என்று நம்பிக்கொண்டிருக்கையில் மறுபடியும் வரதராஜன் வழக்குகள் மேல் வழக்கு போட்டுள்ளதாகவும், அதனால் ஜவஹர் பழனியப்பன் அதை எதிர் கொள்ள உரிய ஏற்பாட்டை செய்து விட்டு அமெரிக்கா போயாச்சு என்று வழக்கம் போல் சேதி வந்தது

இச்சூழலில்தான் குமுதம் ரியல் ஓனர் ஜவஹர் பழனியப்பனின் மகன் ஒரு இன்ஜினியராக இருந்தாலும் கோதை ஆச்சி மூலம் குமுதத்தின் செல்வாக்கை புரிந்து வைத்திருந்தார். அவருக்கு தமிழ்நாட்டு செய்திகளை வெளிநாட்டு தமிழர்களுக்கு உடனுக்குடன் பகிரும் ஒரு இணையதளம் தொடங்க வேண்டுமென ஆசை,. அதை இங்கு தன் அப்பா நிறுவனத்தில் ஒர்க் செய்யும் போது வரதராஜனால் விரட்டபட்டு எக்ஸ் எம்ளாயீகளான சிலரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்..

அதன் விளைவாக வெளிநாட்டு தமிழர்களுக்கு மட்டுமின்று தமிழக வாசகர்களுக்குமாக ஒரு புதிய இணைய தளம் மற்ரும் யூ ட்யூப் சேனல் ஆரம்பித்து இருக்கிறார்கள்.. Wow தமிழா என்ற நாமகரணம் கொண்ட இந்த புதிய ஊடகத்தில் இப்போதைக்கு சீனியர் ஜர்னலிஸ்டுகள் உள்பட இருபது ஐந்து பேர் கடந்த இரண்டு மாதங்களாக இராப்பகலாய் பணிபுரிந்து உருவாக்கி இருக்கிறார்கள் இதன் பொருட்டு இங்குள்ள பல விஐபிகளை (ஐயா / அம்மா என்னை நினைவிருக்கா.. நாந்தான் குமுதம் சார்பா வருவேனே.. அந்த.. என்று ரீ கால் செய்து மீட் செய்து பல சிறப்பு பேட்டிகள் 7 கட்டுரைகள் ரெடி செய்திருக்கிறார்கள்.. முன்னதாக இந்த புது மீடியாவை முதல்வர் ஸ்டாலினை வைத்து துவக்கலாம் அல்லது உதயநிதியை வைத்து ஸ்டார் செய்ய போறாங்க., ஸ்டார் ஹோட்டலில் பிரமாண்ட விழா நடத்தப் போறாய்ங்க என்றெல்லாம் சேதி பரவிய நிலையில் நாளை மறுநாள் ஜஸ்ட் லைக் தட் க்ளிக் ஆக போகுதாம்

எது எப்படியோ நொந்து போன சில ஜர்னலிஸ்டுகளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண வரப் போகும் Wow தமிழா-வை நம் ஆந்தை ரிப்போர்ட்டர் வருக வருக என வரவேற்கிறது

ரெங்கராஜன்