ஜங் ஃபுட்களை உட்கொள்வதால், அறிவு மழுங்குகிறது மற்றும் மறதி அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளி வந்தது தெரியாமல் போயிருக்கும்.. அத்துடன் இனிப்பு வகைகளை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகின்றது. ஆகையால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள் மற்றும் செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது மிகவும் நல்லது என்றெல்லாம் எச்சரிகையூட்டியதும் தெரியாமல் போயிருக்கும்.. பரவாயில்லை.. ஆனால் இப்போது பலராலும் ஜங் ஃபுட் என்று சொல்லப்படும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது, உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவை விட மிக மோசமானது என்ற மெசஜை படு ஜாலியாக சொல்லி இருக்கும் ‘குடிமகான்’ படத்தை பாருங்க.. ஜங் ஃபுட்டை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சிடுவீங்க..!
அதாவது ஏ.டி.எம் மிஷின்களில் பணம் நிரப்பும் நிறுவன மொன்றில் பணியாற்றும் நாயகன் விஜய் சிவன், மது அருந்தாமலேயே போதையாகும் வினோத நோயால் பாதிக்கப்படுகிறார். எப்படி எனில் குளிர்பானங்கள், துரித உணவு, நொறுக்குத்தீனி போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டால் நாயகன் விஜய் சிவனுக்கு ஒரு ஃபுல் அடித்தது போல் போதை தலைக்கு ஏறிவிடும். மது அருந்தும் பழக்கம் இல்லாத விஜய் சிவன், இப்படி ஒரு அதிசயமான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதோடு, இதனால் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றில் மாட்டிக்கொள்ள, அதில் இருந்து எப்படி மீள்கிறார், என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘குடிமகான்’ படத்தின் கதை..
ஹீரோவாக வரும் விஜய் சிவன் மாத சம்பளத்தை நம்பி வாழும் மிடில் கிளாஸ் ரோலில் இயல்பாக நடித்திருக்கிறார். நொறுக்குத்தீனிகளின் பிரியராக வலம் வருபவர் காமெடி காட்சிகளிலும், போதை தலைக்கு ஏறியவுடன் செய்யும் அலப்பறை காட்சிகளிலும் கைதட்டல் எல்லாம் வாங்குகிறாராக்கும்.
விஜய் சிவனின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார். மனைவி பவித்ராவாக சாந்தினி தமிழரசன் முதல் பாதியில் நடுத்தர குடும்பத்து தலைவியாக அச்சு அசலாக பிரதிபலித்து குழந்தைகளை கவனிப்பதும், கணவனை நச்சரிப்பதும், மாமானாரின் அலப்பறையை சகித்துக் கொள்வதும் என்று பத்து லட்சணகளுடன் பக்காவாக பொருந்தியுள்ளார்.
நாயகனின் அப்பாவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, மது அருந்தினாலும் அலப்பறை செய்யாமல் இருக்க வேண்டும், என்று மகனுக்கு பாடம் எடுப்பது முதல், இரண்டாவது திருமணம் செய்வது வரை தனது பங்கிற்கு நகைச்சுவை ஏரியாவில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
குடிகார சங்கத்தின் தலைவராக வரும் நமோ நாராயணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஜி.ஆர்.கதிரவன், கே.பி.ஒய் ஆனஸ்ட்ராஜ் ஆகியோரது கூட்டணியால் செகன் ஆப் முழுக்க சிரிப்போ சிரிப்பு..
மெய்யேந்திரனின் கேமரா இயல்பாக இருப்பதோடு, லைவான லொக்கேஷன்களில் காட்சிகளை படமாக்கி படத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. தனுஜ் மேனனின் இசைப் பங்களிப்பு ஓ கே ரகம்.. எடிட்டர் ஷிபு நீல்.பி.ஆர், முதல் பாதியை சற்று மெதுவாக தொகுத்திருந்தாலும், இரண்டாம் பாதியில் நடிகர்களின் ரியாக்ஷன்களையும், டைமிங்கையும் மிக கச்சிதமாக தொகுத்து காமெடி காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஸ்ரீகுமாரின் காமெடி ஸ்டோரிக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் பிரகாஷ்.என், நாயகனின் வினோதமான நோயும், அதை கையாண்ட விதமும், அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக நகர்த்திய விதமும் படத்தை ரசிக்க வைப்பதோடு, வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறது.
மொத்தத்தில் லாஜிக் மீறிய சிரிப்புப் படம்
மார்க் 3/5
தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது.…
ஆதார் எண் இந்தியரின் ஒரு அடையாள எண்ணாக மாறிவிட்ட நிலையில், அனைத்து குடிமக்களின் வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்ட…
ஒரு நாட்டின் வரி வசூலை உடனடியாக 75% அதிகப்படுத்தவேண்டும். கண்டிஷன்கள்: அதிரடி ரெய்டுகள் கூடாது. வரிகளை அதிகப்படுத்தக்கூடாது. மக்கள் கழுத்தில்…
இந்தியாவில் விற்பனைத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர் என்றும், இந்தியாவில் விற்பனைப் பணியாளர்களில்/ விற்பனைத்துறை உழைப்புச்…
ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. 'மிர்ச்சி' சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர்…
தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக…
This website uses cookies.