கேரக்டரில் ரோலில் நடிப்பதுடன் இயக்குநராகவும் திட்டமிடும் கே எஸ் ஜி வெங்கடேஷ்!
வெள்ளித் திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் தொடர்நது நடித்து திரைத்துறையில் பிரபலமானவர் கே எஸ் ஜி வெங்கடேஷ் , இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவுலகில் பிரபலம். அண்மையில் கூட ’பெட்ரோமாக்ஸ்’ என்னும் படத்தில் படத்தின் மூலம் தனிக் கவனம் பெற்றவர் தொடர்ந்து கேரக்டர் ரோலில் நடித்துக் கொண்டே விரைவில் இயக்குநராகும் எண்ணமும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
கே எஸ் ஜி வெங்கடேஷ் தமிழ் திரையுலகின் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர், இவர் தமிழ் திரையுலகிற்கு கற்பகம், கை கொடுத்த தெய்வம், குலமா குணமா, பணமா பாசமா, செல்வம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியங்களை கொடுத்த கே எஸ் கோபால கிருஷ்ணன் மகன் .
இவர் 1989-ம் ஆண்டு “அத்தைமடி மெத்தையடி” திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், முழு நேர தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திடீரென்று 2014-ம் ஆண்டு இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் வெளியான ‘சசதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் மீண்டும் நடிக்க தொடங்கி ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து பிரபலமாகியுள்ளார்.
கே எஸ் ஜி வெங்கடேஷ் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் 2017-2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகி மாபெரும் வெற்றியடைந்த நந்தினி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 2018ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு, 2019ல் சன் தொலைக்காட்சியின் ரன் தொடரிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தில், தமன்னாவின் தந்தையாக உருக்கமான வேடத்தில் நடித்து இருந்தார். ‘‘இந்த படமும், கதாபாத்திரமும் எனக்கு நிறைய பாராட்டுகளை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. ‘‘தொடர்ந்து இதுபோன்ற அப்பா வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை எனக்குள் புகுத்தி இருக்கிறது’’ என்ற கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் ‘சூழல் சரியாக அமையும் பட்சத்தில் இயக்குநராகவும் மீண்டும் அவதாரம் எடுப்பேன்’ என்றார்.