நேபாளத்தில் கே.பி சர்மா ஓலி மீண்டும் பிரதமராக நியமனம்!

நேபாளத்தில் கே.பி சர்மா ஓலி மீண்டும் பிரதமராக நியமனம்!

நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க தவறியதால் கே.பி.சா்மா ஒலியையே மீண்டும் பிரதமராக நேபாள நாட்டு அதிபா் பித்யா தேவி பண்டாரி நேற்று இரவு நியமித்தார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர் சர்மா ஓலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் அதிகரித்தது. இதனாஅல் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி, பிரதமர் ஓலி பரிந்துரைத்தார். இதை, அதிபர் பித்யா தேவி பண்டாரி ஏற்றார். ஆனால் பிரதமரின் முடிவுக்கு நேபாள சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இந்நிலையில் அரசியல் குழப்பம் அதிகரித்ததால் அதிபரின் உத்தரவின்படி, நாடாளுமன்றத்தில் கடந்த 10-ம் தேதி நடந்த பிரதமர் சர்மா ஓலி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவா் புஷ்பகமல் தாஹால் (பிரசண்டா) அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் பிரதமர் ஓலி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.

இதன்பின், அதிபர் பித்யா தேவி பண்டாரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சி அமைக்க தகுதி உள்ள கட்சிகள் 13ம் தேதிக்குள் அதிபரை சந்தித்து உரிமை கோர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே, நேபாளத்தில் புதிய ஆட்சி அமைக்க எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேபாள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆட்சி அமைக்க அதிபரிடம் உரிமை கோர முடிவு செய்யப்பட்டது.

ஆனால் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத காரணத்தால் கே.பி.சா்மா ஓலியையே மீண்டும் பிரதமராக அதிபா் பித்யா தேவி பண்டாரி நேற்று இரவு நியமித்தார்.நேபாள நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற 30 நாள்களுக்குள் கே.பி. சா்மா ஓலி நாடாளுமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.

error: Content is protected !!