உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவராக கோயம்பேடு த.மணிவண்ணன் நியமனம்!

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவராக கோயம்பேடு த.மணிவண்ணன்  நியமனம்!

லகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் பல்வேறு தமிழர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்படுகிறது உலகத் தமிழர் பேரமைப்பு. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுவே இதன் முதன்மை முழக்கம். 2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இவ்வமைப்பின் வாயிலாக இதுவரை நான்கு மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழர் வாழ்வியல் நலன்கலைப் பாதுகாத்தல், தமிழர்களின் மொழி, கலை மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப்பாதுகாத்தல், தமிழர்களின் குடியியல் உரிமைகள், அரசியல் உரிமைகள், மானுட உரிமைகள் ஆகியவற்றைப்பாதுகாத்தல் ஆகியவை பேரமைப்பின் முக்கிய நோக்கங்கள்.இந்நிலையில் கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கத்தின் தலைவரும், கோயம்பேடு காய் கனி மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயலாளரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழார்வலருமான த.மணிவண்ணன் இந்த உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத்தலைவராக தான் நியமிக்கப்பட்டதும் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறனுக்கு கடிதம் மூலம் நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார் த.மணிவண்ணன். அந்தக் கடிதத்தில், “உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவரக என்னை நியமித்துள்ளதை அறிந்து பெருமை கொள்கிறேன். என்னை இந்த பொறுப்புக்குப் பணித்த தங்களுக்கு என்றென்றும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகத் தமிழர் நலனுக்காகவும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தங்களது சீரிய தலைமையின் கீழ் சிறப்பாகச் செயல்படும் உலகத் தமிழர் பேரமைப்பில் தொண்டு செய்வதில் என்னையும் இணைத்ததில் மிகவும் மகிழ்கிறேன். எப்போதும் போல் தங்களுக்குத் தோள் கொடுத்து துணை நிற்பதை என் கடமையாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் சென்னை அலுவலகம்:
6, தெற்கு மதகுத் தெரு,
கோட்டூர்புரம்,
சென்னை – 600 085.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்:

விளார் சாலை,
தஞ்சாவூர் – 613 006.

த.மணிவண்ணன் அலுவலகம்:

TD 95, அண்ணா கனி அங்காடி வளாகம்,

கோயம்பேடு,
சென்னை – 600 092.
தொடர்பு எண்: +91 93810 14508 / +91 94440 71264

error: Content is protected !!