ஹீட் அதிகமாச்சுன்னா கிட்னி ஃபெயிலராகி விடும்!

நம் நாட்டில் எக்கச்சக்கமான பேர்களுக்கு கிட்னி ஃபெயிலர் எனப்படும் சிறுநீரக வியாதிகள் இருப்பதே அறியாமல் இருக்கின்றனர் என்று சொன்னால் நம்பித்தான் ஆகணும்.. ஒரு ஆய்வில் இந்தியாவில் சுமார் 9 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்களுக்கு அவர் களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது இதில் பெரும் பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.

health may 10

ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது. நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்

இதனிடையே மத்திய அமெரிக்க நாடுகளில் சமீப காலமாக மர்மமான சிறுநீரக நோய் பாதிப்புகளால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரும் இந்நோயினால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இது குறித்து தீவிரமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் வெயிலினால் ஏற்பட்ட வெப்பத்தில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் இது போன்ற சிறுநீரக நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தவகையில் இந்தியாவும் கடுமையான வெப்ப தாக்கம் உள்ள நாடுதான். எனவே, இங்கும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, கோவா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெப்பத்தால் உடலில் இருந்து வியர்வையாக நீர் வெளியேறுவதால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகின்றன. அதே நேரத்தில் சிறுநீரக நோய்கள் மட்டுமின்றி நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களும் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

•சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்

•வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்

•சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.

ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன

•உடல எடை இழப்பு
•குமுட்டல் வாந்தி
•பொதுவான உடல்நலக்குறைவு
•சோர்வு
•தலைவலி
•அடிக்கடி ஏற்படும் விக்கல்
•உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)

ஆனாலும் சிறுநீரக பாதிப்பு வருமுன் காப்பதே சிறந்த முறையாகும். சிறுநீரக பாதிப்பு உள்ள நிலையில் அதிக நீர், உப்பு, பொட்டாசியம் போன்றவைகளை அதனால் வெளியேற்ற முடியாது. எனவே..

வாழைப்பழம்
பால்
கீரை
சர்க்கரை வள்ளி போன்ற உணவுகள் அதிக பொட்டாசியம் சத்து கொண்டவை.
பாஸ்பரஸ் சத்து உடைய உணவுகள்
பால்
பாலாடை
கொட்டை வகைகள்
கோலா வகைகள்
டின்னில் அடைத்த டீ
தயிர்
பீன்ஸ் கொட்டை
முழு தானியம் போன்றவையும் சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் தவிர்த்து விட வேண்டும்.

சிறுநீரக பாதிப்பு – மருந்துகள்

பாஸ்பரஸ் குறைப்பதற்கான மருந்துகள்
சிவப்பு ரத்த அணு கூடுவதற்கான மருந்துகள்
இரும்பு சத்து மருந்துகள்
ரத்தக் கொதிப்பினை சீர் செய்யும் மருந்துகள்
வைட்டமின் மாத்திரைகள் என கொடுக்கப்படுகின்றன.

மேலும் டயாலிஸஸ் என்பது பொது மக்கள் எளிதாய் கூறும் மருத்துவ வார்த்தை ஆகி விட்டது. டயாலிஸஸ் என்பது உடலின் கழிவுப் பொருட்களை வடிகட்டி வெளி அனுப்பும் சிறு நீரகத்தின் வேலையை மிஷின் கொண்டு செய்வது. இது சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு உயிர் காக்கும் முறை ஆகும்.