ஒரு ஆண், பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ தொடும் போது நாம் தனியாக இல்லை. ஒரு துணையோடு தான் இருக்கிறோம் என்ற பாதுகாப்பான உணர்வு தோன்றுகிறது. அது தவிர பிறரால் விரும்பப் படுகிறோம் என்ற நம்பிக்கை உணர்வு அங்கே துளிர் விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுள்ள மனிதப்படைப்பு என்கிற எண்ணமும், அதன் மூலம் ஒரு வித இன்பமும் உண்டாகிறது. கைகளால் மட்டுமே தொட முடியும் என்பதில்லை. ஒரு விதக் கதகதப்பு, நெருக்கம், இனம் புரியாத மென்மை போன்ற உணர்வுகளை ஊட்ட தோலோடு தோல் உரசும் பல வகைத் தொடுதல்கள் உண்டு. இந்த வகைகளுள் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவது தான் முத்தம்…!
தாய் தரும் பாச முத்தம் துவங்கி தாரத்திடம் பெறும் காம முத்தம் வரை, வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் நமக்கு பாச பிணைப்பை உணர்த்தும் ஒன்றாக உள்ளது முத்தம். திருமண அல்லது காதல் வாழ்வில் துணையிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் எளிய வழிகளில் அற்புதமான ஒன்று முத்தம். அதிலும் பார்ட்னர்களுக்குள் கொடுத்து கொள்ளும் லிப்லாக் முத்தமான உதட்டோடு உதடு வைத்து கொடுத்து கொள்ளும் முத்தம். இது உயிரை விட மேலாக ஒருவர் மற்றொருவரை நேசிப்பதை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் உள்ளது.
💋முத்தம் என்பது பல வகை இன்ப உணர்வுகளைக் கிளர்ச்சி அடையச் செய்யும் தன்மை கொண்டது. அற்புதமான உணர்வுகளை நரம்புகளில் ஆர்ப்பரித்து எழச் செய்வது. ஒரு ஆண் பெண்ணிடமோ, அல்லது ஒரு பெண் ஆணிடமோ தனது மனதுக்குள் வைத்திருக்கும் ஆசை, நெருக்கம் போன்றவற்றைத் தெரிவிக்க முத்தத்தைப் போல ஒரு அற்புத சாதனம் வேறொன்றில்லை.
உதட்டில் முத்தம், கைகளில் முத்தம், நெற்றியில் முத்தம், மூக்கில் முத்தம், கண்களை திறந்து முத்தம், கண்களை மூடிக்கொடுப்பது, கன்னத்தில் முத்தம், கண்களில் முத்தம், கழுத்தில் முத்தம் என முத்தத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.
கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.
நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம்.
மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தம் என்கிறார்கள்.
கண்களை திறந்து முத்தம் கொடுக்கும் போது, உங்களது துணை ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்றும், கண்களின் மேல் முத்தம் கொடுத்தால் நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்றும், கழுத்தில் முத்தம் கொடுத்தால் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தமாம்.
இதுதவிர பிரஞ்சு முத்தம் என்பது தீவிரமான மற்றும் உணர்ச்சி மிக்க முத்தத்தில் ஒரு வடிவம். இது ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
சில்லென்று சில குறிப்புகள்
💋ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது.
💋 எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .
💋 காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விசயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .
💋66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர்
💋 அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .
💋உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான்.
💋 நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .
💋இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .
💋 ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.
💋வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.
💋மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.
💋 முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது. குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.
💋முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .
💋 5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.
💋ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.
💋முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.
💋இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இரு ப்பதாலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.
💋தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.
💋இதேபோல 1980-களில் ஒரு ஆய்வில் வேலைக்கு செல்வதற்கு முன்பு மனைவியை முத்தமிடும் ஆண்கள் குறைவான விபத்தில் சிக்குகிறார்கள் என்றும், அதிக வருமானத்துடன் இருந்ததாகவும் கூறுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி…
கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அவர் செய்தது தவறு என்று பாஜக அபிமானிகள்…
“அடுத்தடுத்து வரும் படங்களில், சின்ன வேடத்தில் நடித்தால்கூட போதும் என நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே ஹீரோ என்று வந்திருக்கும்…
டைரக்டர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.…
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம்…
இரண்டு நாட்கள் முன் வரை எம்பியாக இருந்த ராகுல் காந்தி, தற்போது தனது அந்த பதவியை இழந்து நிற்கிறார். அவரது…
This website uses cookies.