September 29, 2021

முத்தம் பற்றிய முழுத் தகவல் அறிக்கை!

ஒரு ஆண், பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ தொடும் போது நாம் தனியாக இல்லை. ஒரு துணையோடு தான் இருக்கிறோம் என்ற பாதுகாப்பான உணர்வு தோன்றுகிறது. அது தவிர பிறரால் விரும்பப் படுகிறோம் என்ற நம்பிக்கை உணர்வு அங்கே துளிர் விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுள்ள மனிதப்படைப்பு என்கிற எண்ணமும், அதன் மூலம் ஒரு வித இன்பமும் உண்டாகிறது. கைகளால் மட்டுமே தொட முடியும் என்பதில்லை. ஒரு விதக் கதகதப்பு, நெருக்கம், இனம் புரியாத மென்மை போன்ற உணர்வுகளை ஊட்ட தோலோடு தோல் உரசும் பல வகைத் தொடுதல்கள் உண்டு. இந்த வகைகளுள் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவது தான் முத்தம்…
kiss 1
* முத்தம் என்பது பல வகை இன்ப உணர்வுகளைக் கிளர்ச்சி அடையச் செய்யும் தன்மை கொண்டது. அற்புதமான உணர்வுகளை நரம்புகளில் ஆர்ப்பரித்து எழச் செய்வது. ஒரு ஆண் பெண்ணிடமோ, அல்லது ஒரு பெண் ஆணிடமோ தனது மனதுக்குள் வைத்திருக்கும் ஆசை, நெருக்கம் போன்றவற்றைத் தெரிவிக்க முத்தத்தைப் போல ஒரு அற்புத சாதனம் வேறொன்றில்லை.

kiss 2

சில்லென்று சில குறிப்புகள்

*ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது.

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

  • நமது அன்புக்குரியவரிடம் அதிக நேரம் முத்தம் சிகிச்சையை பரிமாறிக்கொள்ளும் போது, நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
  • நமது உடலில் தேவையின்றி தேங்கும் கலோரிகள் காரணமாக கொழுப்பு அதிகரித்து, உடல் பருமனும் அதிகரிக்கிறது. எனவே இந்த பிரச்சனையை தடுக்க முத்தமிட்டுக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எளிதில் கரைய உதவிபுரிகிறது.
  • ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஏற்படும் தீராத தலைவலி பிரச்சனையை போக்குவதற்கு, தங்களின் துணையுடன் முத்தமிட்டுக் கொள்வது சரியான தீர்வளிக்கும்.

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விசயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர்

*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான்.

*நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது. குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.

*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இரு  ப்பதாலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.

*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

1 thought on “முத்தம் பற்றிய முழுத் தகவல் அறிக்கை!

Comments are closed.