September 18, 2021

புதுச்சேரி-க்கு நான்தான் அட்மின் சீஃப் – கவர்னர் கிரண்பேடி அறிவிப்பு

புதுவை கவர்னர் கிரண்பேடி பதவியேற்பதற்கு முன்பே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சில பல உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர் அதிகாரிகளுடன் தகவல் பரிமாற்றத்துக்காக வாட்ஸ்-அப் குழு ஆரம்பித்தார். அதில் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் கூட்டுறவு பதிவாளர் ஒருவரின் செல்போனில் இருந்து 29ம் தேதி கவர்னருக்கு ஆபாச படம் அனுப்பப்பட்டதாக அவரை கவர்னர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததையடுத்து அவர் பணியில் சேர்ந்துள்ளார்.

pudu jan 8

இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடத்தி வாட்ஸ்-அப் குரூப்பில் அதிகாரிகள் இடம் பெறவேண்டிய அவசியமில்லை. மேலும் சனி, ஞாயிறு கிழமைகளில் பணிபுரிவது குறித்து அதிகாரிகளே முடிவு செய்து கொள்ளலாம் என கூட்டத்தில் முடிவு செய்து தலைமை செயலருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கிடையில் டெல்லி சென்று தகவல்தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து விட்டு புதுவை திரும்பிய கவர்னர் அமைச்சரவை உத்தரவுpudhucherry,governor,kiranbediசெல்லாது என உத்தரவு பிறப்பித்தார். இதனால் கவர்னருக்கும் அரசுக்குமிடையே மோதல் வெடித்துள்ளது. துணைசபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், தனவேலு, விஜயவேணி ஆகியோர் ஆவேசமடைந்து நேற்று மதியம் சட்டசபை வளாகத்துக்கு திரண்டு பேட்டியளித்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி மக்களுக்கு அம்மாநில துணை நிலை கவர்னர் கிரண் பேடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்:, “புதுச்சேரியில் அனைத்து நிர்வாக பணிகளுக்கும் நானே பொறுப்பு. கவர்னர் மாளிகை வெறும் தபால் நிலையம் போல் செயல்படாது. புதுச்சேரி மக்களுக்கு இனி மாதம் ஒரு முறை கடிதம் எழுதுவேன்.நிதி மதிப்பீடுகள் மற்றும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவேன்.

எனது அணுகுமுறை யாரையும் தண்டிக்கும் நோக்கமானது அல்ல. யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அரசின் பொது நிதி தேவையானவர்களை சென்றடைய வேண்டும். சட்டத்தின் ஆட்சியை அச்சமின்றி, யாருக்கும் சாதகமின்றி அமல்படுத்துவேன். புதுச்சேரியில் ஒற்றுமையை தழைத்தோங்க செய்வதே எனது கடமை” என்று தெரிவித்துள்ளார்