November 29, 2021

நான் வந்துட்டேன்னு சொல்லு – பொது நிகழ்ச்சியில் வட கொரியா அதிபர் கிம்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில், பல்வேறு புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். தலைநகர் பியாங் யாங் அருகே உரம் தொழிற்சாலையை கிம் ஜாங் உன் திறந்து வைத்த போது எடுக்கப்பட்ட 6 நிமிட வீடியோவை வட கொரிய அரசு வெளியிட்டுள்ளது. அப்போது கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் உள்ளிட்ட வட கொரிய அரசின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். திரண்டு இருந்த மக்களின் ஆரவாரத்திற்கு இடையே பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறந்து வைத்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை கட் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார். ஆலையை திறந்து வைத்ததுடன் வட கொரிய அரசின் முக்கிய தலைவர்களுடன் கிம் ஜாங் உன் ஆலோசனையும் நடத்தியுள்ளார். இதையடுத்து கிம்முடன் இவ்வாறு இறுதியில் தொலை பேசியில் பேச போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவை நிறுவிய கிம் சங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காததால் அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவியது. மேலும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் தேதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த செய்திகளை மறுப்பதோடு, கிம் நலமாக இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தது ஆனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் வராத காரணத்தினால்அவர் விஷயத்தில் பலத்த சந்தேகம் எழுந்து வந்தது.

இந்நிலையில் கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வடகொரியா அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் தெற்கு பியோன் கான் மாகாணத்தில் உள்ள நகரமான சன்சோன் நகரில் இருக்கும் ஒரு சஞ்சோன் பாஸ்படிக் உரத் தொழிற்சாலை துவக்க விழாவில், கலந்து கொண்ட இவர், ரிப்பன் வெட்டி தொழிலாளர் தினமான நேற்று (மே 1–ந் தேதி) திறந்து வைத்ததாக வடகொரியாவில் ஊடகம் யோனகாப் தெரிவித்துள்ளது. இந்த விழாவில் அவரின் சகோதரி கிம் யோங் ஜாங் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது உரம் தயாரிக்கும் நோக்கத்துடன் கட்டி முடிக்கப்பட்ட சஞ்சோன் பாஸ்படிக் உரத் தொழிற்சாலையை, தொழிலாளர் தினமான மே 1–ந் தேதி திறந்து வைத்துள்ளார். மேலும், உர தொழிற்சாலையின் உற்பத்தி முறை குறித்து கிம் திருப்தி அடைவதுடன், நாட்டின் ரசாயனத் தொழில் மற்றும் உணவு உற்பத்தியின் முன்னேற்றத்திற்கு இந்த ஆலை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்று குறிப்பிட்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அங்கிருக்கும் மத்திய வானொலி ஒன்றில் கிம் மீண்டும் தோன்றியது குறித்து பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே கடந்த 20 நாட்களாக பொதுவெளியில் தென்படாமல் இருந்த வடகொரிய அதிபர் உரத்தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டதாக வந்த செய்தியை பல்வேறு தரப்பினரும் உற்று நோக்கி வருகின்றனர்.

கிம் கலந்துகொண்ட விழா தொடர்பான புகைப்படங்களை ஆராயும்போது கிம்மின் தங்கை கிம் யோ ஜாங் சற்றே கூடுதல் ஒப்பனையோடு வந்திருப்பதாகவும், இது அதிகாரத்தில் அவருக்கு உயர்பதவி வழங்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாகவும் யூகிக்கின்றனர்.

புகைப்படத்தில் ஒருவர் மாஸ்க் அணிந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், வட கொரியாவில் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்கின்றனர். உரத்தொழிற் சாலை என்கிற பெயரில் வடகொரியாவின் ஆயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தைத் தயாரிக்கும் ஆலையாக இது இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.