February 4, 2023

இந்திய ஒற்றுமை பயணம்- என் அனுபவங்கள் :கிர்த்திகா தரன்.

தாவது ஒரு அச்சு பத்திரிகை கட்டுரையோ, பேட்டியோ எங்களைப்போல் கலந்துக்கொண்ட முன்றாம் நபரின் பார்வையில் இருந்து வினவலாம் சின்ன் எதிர்பார்ப்பு இருந்தது. உண்மையில் என்ன திராவிடம் பேசினாலும் தமிழர்களுக்கு பெண்கள் பற்றிய மதிப்பீடுக்ள் குறைவுதான். நாமளேதான் மீடியாவாகவும் மாறனும். ஆண்கள் மட்டும்தான் கிளையண்ட்ஸ் என இன்னும் மீடியா அப்டேட் ஆகவில்லை. எல்லா இடத்திலும் உரிமை போராட்டமா என வினவலாம்..ஆம். தேவையும். பெரியார் பிறந்த தினம் வேறு.

அவசரமாய் நாகர்கோவில் பிரிமியம் தட்காலில் புக் செய்தேன். நட்புக்கு போன் செய்தேன். அவரும் வரத்தயார். அங்கு அவருடன் தங்கிக்கொண்டேன். போகும் வழியில் ஆட்டோவில் எப்படி ரெஸ்பான்ஸ் எனப்பேசினேன். அவருக்கு அவர் ஊருக்கு ராகுல் வந்தது மகிழ்வு. டைமிங் எல்லாம் சொன்னார்..எங்கு வந்தால் ராகுல் பார்க்க முடியும் என்பதையும் சொன்னார். டிரைவர்களிடம் பேசினால் போதும். அரசியல் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். எங்களுக்கு பாதுகாப்பு முன்னிட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இரண்டு மணிக்கு மீட்டிங். பத்து மணிக்கே வந்து விட வேண்டும்.கைப்பைகள் கூடாது. சரியாக பதின்னொன்று வாக்கில் சென்றால் உள்ளே விடவில்லை. சங்கிதா, சந்தியா இருவரும் இருந்தனர். பின் உள்ளிருந்து யாரோ சொல்ல நால்வரும் உள்ளே சென்றோம்.

அந்த பள்ளியில் காங்கிரஸ் பிரமுகர்கள் கூடி இருந்தனர். எங்கெங்கு காணிலும் வி.ஐ.பி என சொல்லும் அளவுக்கு இருந்தது. வரிசையாக சேர்கள் போட்டு யார் யார் எப்படி அமர வேண்டும் என்னும் அளவுக்கு ஒத்திகை பார்த்தாச்சு. எங்கும் எளிமை. பள்ளி திண்ணையில் ஒருவர் கால் நீட்டி அமர்ந்திருந்தார். பார்த்தால் நம்ம ஜோதிமணி மேம். அவர்களுக்கும் எனக்கும் அறிமுகம் குறைவே..அதில் மிக அருகில் நெருக்கமானவராய் ஒரே நொடியில் மாறிப்போனார். பேச நேரமில்லாவிடினும் மணிக்கணக்கில் அருகில் இருந்தோம். நெருக்கமான ஒரு உணர்வை தருகிறார்..இது தலைவர்களுக்கு அவசியமான பண்பு.

அடுத்து யார் யார் அழைத்து இருந்தார்கள் எனில் , அனைவரும் சமூகத்துக்கான பெரும் பங்களிப்பை வழங்கும் பெண் சமூக ஆர்வலர்கள். அவர்களில் ஒருவராக நம்மை தேர்ந்து எடுத்து இருந்தது மனதுக்கு நிறைவான அழைப்பு. இது அரசியல் சாரா அழைப்பு. ஏன் எனில் வெளியே ராகுல் காந்தி சந்திக்க அரசியல் சார்பில் ஆயிரக்கணக்கில் காத்திருந்தனர். வி.ஐ.பி களுக்கும் பஞ்சமில்லை. இங்கு சந்தித்ததோ மக்கள் நலன் சார்ந்தவர்கள் மட்டும். பெரும்பாலானவர்களுக்கு டில்லியில் இருந்து திட்டமிடப்பட்டு அழைப்பு வந்ததையும் தெரிவித்தார்கள்.. பெண் சமூக ஆர்வலர்கள், சமூக சேவகர்கள், தலித் ஆக்டிவிஸ்ட்கள் என மூன்றுக்குழுக்கள் அன்று சந்திப்பு.

ஒருவர் எம்.பி பதவிக்கு செலவு செய்யத்தயார். சந்திக்கனும் என்று முயற்சியாம். அவர்களுக்கு அங்கு இடமே இல்லை. சமூக மக்களுக்கான இடமாக இருந்தது. எவிடன்ஸ் அமைப்பபு, வழக்கறிஞர் அருள் மொழி, தூத்துக்குடி உதயகுமார் என பலர் வந்திருந்தனர் அனைவரையும் அங்கு சந்தித்தது மனதில் அத்தனை நிறைவு. சமூக நலன் நோக்கி சாதிக்கும் மனிதங்கள். வெற்றுப்பேச்சாளர்கள், தலைவர்கள் என யாருமில்லாமல் சமூகம் நன்றாக இருக்கனும் என்று மனதார நினைக்கும் மனிதங்கள் பெரும்பான்மை இன்னும் மனதில் ஆச்சர்யம்..கட்சிகாரர்களுக்கும் சரி, பொது மக்களுக்கும் சரி சமூகம். சார்ந்து நல்லது யோசிக்கும் மனிதர்களை அவர்களுக்கு நன்றாக அடையாளம் தெரிகிறது. அவர்களின் பார்வை அவசியம் என ஒரு மத்தியக் கட்சி இப்படி அழைப்பது பெரிய விஷயமாக கருதுகிறேன். அங்கு பல வருட சமூக களப்பணியாளர்கள் மத்தியில் சிறு துளியாக எனக்கும் ஒரு வாய்ப்பு என்பது மனதுக்கு நிறைவான விஷயம்.

அங்கு மிகச்சாதரண சேர்கள், அந்த டீப்பாய காங்கிரஸ் துண்டு போட்டு போர்த்தக்கூடாதா என நானே கேட்டுவிட்டேன். அங்கு எந்த பந்தாக்கும் இடமோ, நேரமோ இல்லை. ராகுல் காந்தி சந்திக்கும் மனிதர்கள் , உரையாடல்களே நோக்கமாய் இருந்தது. எனக்கு கோரிக்கைகள் இருந்தது. அதைவிட தமிழக காங்கிரஸ் பற்றிய பொது மக்களின் ஒரு சின்ன ஃபீட்பேக் தலைவர் காதுக்கு நேரடியாக சென்று அடைய விரும்பினேன்.பல இடங்களில் இதுதான் பேசனும், இதுதான் கேக்கனும் என ப்ரோட்டோகால்கள் இருக்கும். இங்கு எது வேணா பேசுங்க என்று சொன்னது பெரிய விசயம் .மிக நெருக்கமாய் ஜெயராம் ரமேஷ் வந்தமர்ந்து நாம் சொன்னதுக்கும் காது கொடுத்தது என்பது இன்ப அதிர்ச்சிகள்.

உணவு அசத்தலாய் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு பஞ்சாபி மூவர்ணக்கொடி, அவர்தான் முதலில் நிற்பார் பாரத் ஜோடோவில். அவரை லைவ் பேட்டி எடுத்தேன். முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலர் நம்மோடு. இந்த நிகழ்வு முடிந்து அவர்களுடன் பார்த் ஜோடோ கிளம்பினேன். ராகுல் காந்தி நடக்கும் வேகம் அசாத்தியம். தொடரவே முடியவில்லை. கொஞ்சம் கேப் விட்டதில் இரு கிமி இடைவெளி வந்துவிட்டது. ( சத்தமில்லாமல் ஒரு காரில் ஏறிப்போய் இணைந்தது ரகசியம்).

டான்ஸ் ஆடின விடியோவை உலகமே பார்த்தது. மக்கள் இருப்பக்கமும் மணிக்கணக்கில் வேடிக்கை பார்க்கின்றனர். மதுரையில் வந்தவர்கள் நான் ஏதோ காங்கிரஸ் வி.ஐ பி என நினைத்து பேசினர். அதையும் லைவ் ல போட்டேன். பின்பு ஜோதி மணி மேம் வருகிறார்கள் பாருங்கள் எனச்சொன்னேன். இதில் யாத்திரிகர்கள் என 300 பேர் பயணிக்கிறார்கள். அதில் கன்னையா குமாரும் ஒருவர். அவரையும் சந்தித்தேன். இந்த 300 பேரில் தமிழ் பெண்கள் உள்ளார்களா என அவர்களிடமே கேட்டேன். உண்டு என்றார்கள். அவர்கள் பாதுகாப்பு முன்னிட்டு அவர்களை சுற்றி போலிஸ் வளையம் உண்டு.

இருப்பினும் அவர்களை லோக்கல் மக்களுடன் நடந்து போங்க. இது நிஜ இந்தியாவை தரிசிக்க உங்களுக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு , மிஸ் செய்ய வேண்டாம் என உரையாடினேன். அவர்களுக்கு தெரிந்து இருந்தாலும் என் பார்வை பரிமாறும் பொழுது எல்லாருமே நன்றாக கேட்டுக்கொண்டார்கள்.அத்தனைப்பேரும் காதை தீட்டிக்கொண்டு கேட்க தயாராக இருப்பது புரிந்தது. காங்கிரஸ் கட்சியினர்தான் யாத்திரிகள் என பலர் நினைத்துக்கொண்டு உள்ளனர்.இதற்கான தேர்வுகள் நடைப்பெற்றதாம். சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்து இதில் இணைந்துள்ளனர். அவர்கள் இந்தியாவின் நன்மைக்காக 150 நாட்கள் எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டு நடக்கின்றனர். யாத்திரிகள் ராகுலோடு நடக்கும் நல் எண்ணம் உடைய பொது மக்கள்..

அது தவிர அதில் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். இன்னும் மூன்று நாட்கள் நான் இணைய வேண்டும் என்ற ஐடியா உள்ளது. திட்டமிட வேண்டும். அப்படி சண்டிகர், ஜெய்பூர், சத்திஸ்கர், நியுயார்க் என பல பெண்கள் தனியே பயணம் செய்து வந்திருந்தனர். என்னை பொறுத்தவரை நான் அங்கு செல்வதால் ஏதாவது ஒரு வேல்யூ அதில் அணில் அளவுக்காவது செய்ய வேண்டும் என நினைப்பேன் . எனவே என் பக்கத்தில் முடிந்தளவு எல்லா விஷயங்களும் அப்டேட் செய்தேன்.

இப்பொழுதும் நடைப்பயணம், கேரவன் என ஏதாவது புரளிகள் இணையத்தில் கவனிக்கிறேன். அங்கு நிஜமாக மக்களின் அன்பு, உயர்ந்த எண்ணங்கள் தவிர ஏதுமில்லை. உண்மையில் அங்கு சென்றால ஒற்றுமை அது மட்டும்தான் இருக்கும். சிலருக்கு தமிழில் இந்திய ஒற்றுமை ஓங்குக என சொல்லி தந்தேன். முழு தேசத்தையும் அங்கு நாம் தரிசிக்கலாம்…. காங்கிரஸ் தலைவர்கள் கூட மிக எளிமையாக இருப்பார்கள்.யாத்திரிகர்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாய் உள்ளனர். சத்திஸ்கர் காங்கிரஸ் துணை தலைவருடன் பேசினேன். உத்திராகாண்ட் இளைஞரணியை சந்தித்தேன். பலருடன் எண்கள் பறிமாறிக்கொண்டோம்.

ராகுல் காந்தி நோக்கம் ரொம்ப சிம்பிள். குமரி முதல் காஷ்மீர் வரை பலதரப்பட்ட மக்கள், மக்களுக்கான சமூக நலன் கருதும் மனிதர்கள் இவர்களை சந்திக்க, இவர்களுக்கு காது கொடுக்க விரும்புகிறார். வேறு நோக்கம் இருப்பின் அந்த இரு நாளில் வெளிப்பட்டு இருக்கும். என் உள் மனம் அதை சொல்லி இருக்கும். அப்படி ஏதுமில்லை என்பதை கண்ணார மட்டுமல்ல, மனதும் அறிந்தது

மோடி செய்த சாதனை ஒன்று உண்டு என்றால் காங்கிரஸ் இயக்கத்தை மக்களுக்கான இயக்கமான ஒன்றாகவும், சுதந்திர போராட்ட இயக்கமாலவும் மாற்றி நம்மோடு பயணிக்க வைத்ததும்தான். நீங்க உடைத்து தன்னலமுள்ள எல்லாரையும், திருடர்களையும், துரோகிகளையும் உங்க பக்கம் வச்சுக்குங்க. நாங்க காங்கிரஸோடு சமூகத்துக்கான மக்கள் நடப்போம். ஆம் நடக்கும் பொழுது நமக்கான இயக்கம் இது. நம்மை கேட்கும் தலைவர்கள் இவர்கள் என மன நிறைவு..

அங்கு நடந்த ஒவ்வொருவருக்கும் , நடக்க போகும் எவருக்கும் கிடைக்கும். பேசி தீருவதில்லை அந்த அனுபவங்கள்செப் 30 க்கு மேல் கர்னாடாகாவில். வந்தால் இணைந்து அந்த அனுபவம் உங்களுக்கும் தர விரும்புகிறேன். இணைவோம். மகிழ்வோம், ஆடுவோம், பாடுவோம், உரத்து குரல் தருவோம்.

இந்திய ஒற்றுமைக்காக. ..கீர்த்தி