கிச்சடியை தேசிய உணவா? மத்திய அமைச்சர் கவுர் பாதல் மறுப்பு!
இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லியில் நாளை (நவம்பர் 3) ‘உலக உணவு- இந்தியா 2017’ என்னும் கருத்தரங்கு தொடங்குகிறது. இந்திய உணவுத் துறையும், சிஐஐயும் இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கு தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் 200 சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கருத்தரங்கின் ஒரு பகுதியாக நவம்பர் 4ஆம் தேதி மாலை, உலக சாதனை படைக்கும் வகையில் மிகப் பெரிய அளவில் கிச்சடியைச் சமைத்துப் பரிமாறத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிச்சடி, இந்தியாவின் தேசிய உணவாக விளம்பரப்படுத்தப்படுவது குறித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல், “கிச்சடி ஆரோக்கியமானது, சுவையானது, பொருளாதார ரீதியில் விலை குறைவானது. இந்தியாவின் தேசிய உணவாகக் கிச்சடியை அறிவித்து, உலகம் முழுவதும் கிச்சடி கிடைக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உலக சாதனைக்காக விருந்தினர்கள் முன்னிலையில் சமைக்கப்படும் கிச்சடி, கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும்” என தெரிவித்தார். இதையடுத்து . இத்தகவலானது பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை ஆதரித்தும், கண்டித்தும் தகவல் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்யவில்லை. உலக சாதனைக்காகவும், கிச்சடியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும் மட்டுமே அரசு முடிவு செய்துள்ளது என மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில், “கிச்சடியை தேசிய உணவாக அறிவித்ததாகப் பொய்யான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலக சாதனையில் இடம்பெறுவதற்காகவும், #WorldFoodIndia நிகழ்வுக்காகவும் மட்டுமே கிச்சடி தேர்வு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்
ஆனாலும் நவம்பர் 4-ம் தேதி பிரபல சமையற்கலை வல்லுநர் சஞ்சீவ் கபூரைக் கொண்டு, 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கடாயில் 800 கிலோ கிச்சடி கிண்ட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது