August 4, 2021

கேரள உள்ளாட்சி 2-ம் கட்ட தேர்தல் ; வாக்குப் பதிவு நிலவரம்!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நேற்று இரண்டாம் கட்டமாக தேர்தல் நடை பெற்ற , கோட்டயம் உட்பட 5 மாவட்டங்களில் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை , ஆலப்புழை மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது . இந்த 5 மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் உறுதி செய்யப்பட்ட தகவலின் படி மொத்தம் 73.12 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலை விட ( 75 .11%) வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது .

இந்த தேர்தலில் மாவட்டம் வாரியாக இறுதி கட்ட நிலவரப் படி திருவனந்தபுரம் – 70.04 %, கொல்லம் – 73.80 %, பத்தனம்திட்டை – 69.72 %, ஆலப்புழை – 77 . 40 % இடுக்கி – 74.68% வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில்,. கேரளாவில், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு நடைபெற்றது.

451 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 8116 வார்டுகளுக்கு நடை பெற்ற இந்த தேர்தலில் 76 .28 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த 5 மாவட்டங்களில் 47 லட்சத்து 28 ஆயிரத்து 489 ஆண் வாக்காளர்கள், 51 லட்சத்து 28 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள் 93 திருநங்கைகள் உட்பட மொத்தம் 98 லட்சத்து 57 ஆயிரத்து 208 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர் இதில், 57, 895 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆவர். 12643 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடை பெற்றது.

63187 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பதட்டத்திற்குரிய வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட 473 வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற தேர்தலில் மாவட்டம் வாரியாக பதிவான வாக்குகள் விபரம் வருமாறு:- மாலை 6.30 நிலவரப்படி

கோட்டயம் – 73.89 %, எர்ணாகுளம் – 77.02% , திருச்சூர் – 74.92%, பாலக்காடு – 77. 83 %, வயநாடு 79.39% வாக்குகள் பதிவாகி உள்ளது.3-ம் கட்ட தேர்தல் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு வருகிற 14-ந் தேதி திங்கள் கிழமை நடை பெறும். ஒட்டுகள் எண்ணிக்கை 16-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.