April 13, 2021

.நான் கேரளத்தைப் பார்த்துப் ஆற்றாமையோடு பெருமூச்சிடுகிறேன்..!

ஓணம் – இதுவும் தமிழர் பண்டிகைதான் என நிறுவும் முயல்வுகள் பல பதிவுகளில் கண்டேன்… நான் கேரளத்தைப் பார்த்துப் ஆற்றாமையோடு பெருமூச்சிடுகிறேன்… இத்தனைக்கும் கேரளத்தின் கட்சிகள் எதுவும் மாநில அளவிலான கட்சிகள் இல்லை தேசிய கட்சிகள்..அவர்கள் தன்னிறைவு நோக்கி வளர்கிறார்கள்… பக்கத்தில் உள்ள நாமோ எது எதற்கோ உணர்வு மயமாகிக் காலம் தவறுகிறோம்… !

காய்கறி போன்றவைக்கு தமிழகத்தை நம்பி இருந்த கேரளம் இன்று #ஹரிதகேரளம் வழியாக தன் காய்கறித் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது… இறைச்சி, முட்டை, (எவ்வடிவிலானுலும்) போன்றவற்றின் உள்ளூர் தேவைக்கு ஏற்ப உள்ளூர் உற்பத்தி ஊக்கப்படுத்தப் பட்டு வெளி மாநிலத்தைச் சார்ந்திருத்தல் இல்லாமல் போயிருக்கிறது.. கானாம்கெழுத்தி எனப்படும் மத்தி மீனுக்கு பழக்கப்பட்ட உணவு வழக்கம் கேரளத்தின் கடற்கரையில் கிடைக்கும் இயல்பாகக் கிடைக்கும் அல்லது வேறு வகையிலான மீனுக்கான வழக்கமாக மாற்றப் பட்டுள்ளது..

மத்தியத் தொகுப்பில் கிடைக்கும் ரேசன் அரிசி, ஒட்டு மொத்த அரிசி உணவு வழக்கத்தை ஈடுகட்டி உள்ளது கேரளத்தில்… (மட்டை அரிசி)அதற்கு மேலான தேவைகளுக்கு #தமிழகம் சாராமல் #கருநாடகத்தின் அரிசியை நேராக தமிழகத்தில் நுழையாமல் பெற்றிடும் பயணப் பாதைகள் உள்ளன இப்போது அவர்களுக்கு…!

என்.ஆர்.ஐ என வெளி நாடுகளில் வாழ்பவர்களைச் சொல்லும் வேறு மாநிலம் போல அல்லாமல் என்.ஆர்.கே (Non Resident Keralite) எனும் பெருமிதம் உள்ளது அவர்களிடம்… அண்ணா மலைகள் வழியாக மோதிகள் சொல்லும் புனைவுகளுக்கு நாம் கிண்டலிட்டுப் போகிறோம்.. ஆனால்.. பொதுவுடமைகட்சி ஆட்சி , காங்கிரஸ் ஆட்சி என என்ன வந்தாலும் இன உணர்வினைப் பற்றி வெறும் வாய்ப்பீற்றல் தம்பட்டம் ஏதுமின்றி உயர்ந்து வருகிறது ஒரு இனம்… நான் கூறிய தகவலுக்குத் தரவுகள் வேண்டின் தனியஞ்சலில் வருக…!

ராமசாமி துரைபாண்டி