குடியரசு அணிவகுப்பில் இடமில்லையா? – மே.வங்கம், கேரளா அப்செட்!
தலைநகர் டெல்லியில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இருந்து அனுப்பப் படுகிற அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் உத்தரவு மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தை எவ்வாறு விரோத மனப்பான்மை யுடன் மத்திய அரசு அணுகுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சூலே வியாழனன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் அணி வகுப்பு நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் துறைகளும் தங்களின் முக்கிய பிரதி நிதித்துவத்தை முன்னெடுக்கும். இந்நிலையில், 2020 குடியரசு தின அணிவகுப்பு தொடர்பான பட்டியலில் இம்முறை மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், பிகார் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெறவில்லை.
2020-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாநிலங்கள் மற்றும் துறைகளின் விவரம் பின்வருமாறு:
ஆந்திரம்
அஸ்ஸாம்
சத்தீஸ்கர்
கோவா
குஜராத்
ஹிமாச்சலப்பிரதேசம்
ஜம்மு-காஷ்மீர்
கர்நாடகம்
மத்தியப்பிரதேசம்
மேகாலயா
ஒடிஸா
பஞ்சாப்
ராஜஸ்தான்
தமிழகம்
தெலங்கானா
உத்தரப்பிரதேசம்
உள்நாட்டு உற்பதி மற்றும் தொழிற்சாலைத் துறை
குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை
நிதித்துறை
தேசிய பேரிடர் மீட்புத்துறை (மத்திய உள்துறை)
மத்திய பொதுப்பணித் துறை (மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை)
மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் மீன்வளத்துறை