Creative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும் “ காவல்துறை உங்கள் நண்பன் “
தயாரிப்பிலும், விநியோகத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வருபவர் Creative Entertainers நிறுவனர் G தனஞ்செயன் . இவர் தற்போது சுரேஷ் ரவி – ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார்.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் G. தனஞ்செயன், “நாங்கள் Creative Entertainers சார்பில் தரமான கதைகள் கொண்ட படங்களையே தயாரிப்பதையும், விநியோகிப்பதையும் முதல் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம். ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் அதே நேரம் அவர்களுக்கு தரமான கதைகளை தரவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். இந்த நோக்கம் 2020 ஆம் வருடத்தில் பல நல்ல தரமான படங்களை விநியோகிக்கும் பயணத்தில் எங்களை கொண்டுவந்திருக்கிறது. இப்பயணத்தில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் ஒரு அற்புதமான தேர்வாக எங்கள் முன்னால் வந்தது. இப்படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக இப்படம் விளங்கும் என்று தோன்றியது. மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட இப்படம் இயக்குநர் RDM ன் இயக்கத்தில் எதார்த்தமான பாணியில் வெகு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை ஒரு நொடி அசைய விடாமல் கட்டிப்போடும் தன்மையில் அசத்தலாக படத்தை தந்துள்ளார் இயக்குநர் RDM.
படத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்றிருக்கும் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பிரமிப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள். இத்திரைப் படத்தை பிரமாண்டமாக வெளியிட, திரையரங்கு எண்ணிக்கை உட்பட விநியோக திட்டங்களை வகுத்து வருகிறோம். மிக விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்” என்றார்.
Thank you @VetriMaaran sir for releasing the announcement poster of #KavalThuraiUngalNanban acquisition by @CreativeEnt4 …one of the best, hard-hitting films I have seen. Looking forward to release in March 2020👍👍👍 pic.twitter.com/w0BpDTjKs0
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) January 27, 2020
ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல்.
B. பாஸ்கரன், P. ராஜ பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.