Exclusive

கட்டா குஸ்தி – விமர்சனம்!

ந்தக் காலத்தில் (ஜஸ்ட் 80 டூ 90களில்) எஸ்.வி.சேகர் நடித்த மணல் கயிறு, விசுவின் படங்கள், வி.சேகர் என்ற டைரக்டரின் படங்கள் என குடும்ப பாங்கான கதைகளுடன் வாராவாரம் ஒரு சினிமாவாவது ரிலீஸாகும்.. ஆனால் இப்போது பிரமாண்டமான அல்லது குரூரமான கதைக் கொண்ட கதைகளே அதிகம் வருகின்றது.. இக்குறையைப் போக்கி இப்போதைய தலையாய பிரச்னைகளை மறந்து வாய் விட்டு சிரித்து விட்டு வரும் ஸ்டோரி லைன்தான் கட்டா குஸ்தி..!

பண்ணைக்கார குடும்பத்தைச் சேர்ந்த வீராவுக்கு ( விஷ்ணுவிஷால்) அப்பா, அம்மா கிடையாது. அதே சமயம் ஊர் பஞ்சாயத்து தலைவரும், மாமாவுமான கருணாஸ் பாணியில் ஆண் என்ற அகங்காரத்துடன் வாழ்ந்து வருகிறார்.. அப்பேர்பட்டவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்குகிறது அப்போது கருணாஸ் ஐடியாப்படி எட்டாம் வகுப்பு வரைப் படித்த தன்னை விட ஒரு வகுப்பு குறைவாகவே படித்திருக்க வேண்டும், இடுப்புக்கு கீழே முடி இருக்கவேண்டும் என்றெல்லாம் கன்டிஷன்கள் போடுகிறார். இச்சூழலில் கேரள எல்லையில், தனது சித்தப்பா முனீஸ்காந்தின் கட்டா குஸ்தி கலையில் அலாதி ப்ரியத்துடன் வளரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிய சண்டைக்காரி ஆக வேண்டும் என ஆசை. அதனால் கட்டா குஸ்தி கற்று பலப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, அந்த கனவை சுமந்து இருப்பதாலேயே மாப்பிள்ளை கிடைக்காமல் திணறி கொண்டிருக்கிறது கீர்த்தியின் ( ஐஸ்வர்யா லட்சுமி) குடும்பம். இவ்விருவரும் சில பல பொய்களை சொல்லி திருமணம் முடித்து கொள்கிறார்கள்.

இச்சூழலில் கருணாஸ் தன் கிராமத்தின் வளத்தை சுரண்டு நோக்கில் வர இருக்கும் தொழிற்சாலையை எதிர்க்கிறார். அவருக்கு விஷ்ணு சப்போர்ட் செய்கிறார். அந்த புது ஆலை உரிமையாளர் தான் செல்வாக்கால் கருணாஸை ஜெயிலுக்கு அனுப்ப, கருணாஸ் வேலைகளை விஷ்ணு மேற்கொள்கிறார். இதை அடுத்து விஷ்ணுவை கண்டித்து வைக்க அவரது மனைவியிடம் வில்லன் தரப்பு எச்சரிக்கை செய்கிறது. மனைவி பயந்து அடவைஸ் செய்ததையும் மீறிய விஷ்ணுவை அடித்து துவைக்கிறது வில்லன் தரப்பு. அதைக் கண்டு அந்நாள் வரை கணவனுக்கு பயந்த அப்பாவி மனைவியாக அமைதி சொரூபியாக இருந்த ஐஸ்வர்யா லட்சுமி பத்ரகாளியாகி கற்ற வித்தையான கட்டா குஸ்தி போட்டு கணவனை காப்பாற்றுகிறார் . அப்போது தான், ஐஸ்வர்யாவின் உண்மையான ரூபத்தை பார்த்து மிரண்டு போய் விடுகிறார் விஷ்ணு. அதை அடுத்து நடப்பதுதான் கலகலப்பானக் கதை.

விஷ்ணு விஷால் ஏற்றிருக்கும், தெனாவெட்டுடன் விட்டேத்தியாக வாழும் வீரா ரோலில் பக்காவாகப் பொருந்தி போகிறார்.. சில காமெடி சீன்களில் அவரது கமிட்மென்ட் எடுபடவில்லை என்றாலும், பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். . அதே சமயம் படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமிதான் நாயகனாகவும் ஜொலிக்கிறார்.. பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக கிறங்கடித்த ஐஸ்வர்யா, இப்படத்தில் தன் குடும்பம் சொன்ன பொய்யை மறைக்க, அவர் செய்யும் கோல்மால்கள் தொடங்கி கணவனுக்கு ஆபத்து என்றவுடன் ஆக்‌ஷனில் இறங்கி அதகளம் செய்வது உள்ளிட்டவைகளால் தியேட்டரில் அப்லாஸை அள்ளுகிறார். அதிலும் செகண்ட் பார்ட்டில் தன்னை சீண்டிய வீராவின் மாமாவை கன்னத்தில் பொளேரென்று போடுவதும், கணவனுக்கு எதிராக போட்டியில் இறங்க ஆயத்தமாவது என ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் ஏனோ இதில் வில்லன்களாக வருவோர் கொஞ்சம் கூட எடுபடவில்லை..

ரிச்சர்ட் நாதனின் கேமரா,பொள்ளாச்சி ஏரியாவை அப்பட்டமாக காட்டிக் அசத்துகிறது. அதிலும் கட்டாகுஸ்தி போடும் போது கேமராவே களமிறங்கி விடுமளவு இன்வால்மெண்டோடு செய்து அசத்தி இருக்கிறார்.. ஐஸ்டின் பிரகாரன் இசையில் பின்னணி ஓகே. பாடல்கள் தேறவில்லை.. .!

டைரக்டர் செல்ல அய்யாவு தன் பார்வையில் பெண்களை சமமாக பாவிக்கும் மன நிலை இல்லாதா ஆண்களுக்கு சொன்ன மெசெஜ்ஜூம், அதை சார்ந்து எழுதப்பட்ட வசனங்களும் வாவ் சொல்ல வைக்கிறது.. தமிழில் இது பொருத்தமான தலைப்புதான் என்றாலும் இன்னும் எளிமையாக சகலரையும் கவரும் விதத்தில் இருந்திருக்கலாம்

மொத்தத்தில் வாங்க சிரிக்கலாம் என்றழைக்கிறது -கட்டா குஸ்தி

மார்க் 3.5/5

aanthai

Recent Posts

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…!

பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு…

13 hours ago

உணவு விநியோகம் பெற உதவும் வாட்ஸ் ஆப் எண் 8750001323 – இந்திய ரயில்வே அறிமுகம்!

நம் நாட்டின் ரயில் பயணிகள் வாட்ஸ்-ஆப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.…

16 hours ago

சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..!

பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை…

20 hours ago

இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில்…

1 day ago

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…

2 days ago

சிம்ஹா நடித்த ‘வசந்த முல்லை’ படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…

2 days ago

This website uses cookies.