கருணாநிதி கொள்ளுப் பேரன்களின் பெயர் நளன் – நிலா! – காரணம் என்ன?

கருணாநிதி கொள்ளுப் பேரன்களின் பெயர் நளன் – நிலா! – காரணம் என்ன?

பரீசன் – செந்தாமரை தம்பதிக்கு பிறந்த குழந்தைகளின் பெயரானது முறையே நளன் நிலா என்று சூட்டப்பட்டிருப்பது நீலாங்கரை பங்களாவின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்தே தெரிகிறது. அது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. , இதை அடுத்து யாரிந்த நளன், நிலா என்று விசாரி  -என்று நம்ம கட்டிங் கண்ணையாவிடம் சொன்னோம். ஏற்கெனவே ராமர் பாலம் பற்றிய கேள்விக்கு ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்து பட்டம் வாங்கினார் என்று மு.கருணாநிதி பதிலளித்ததை பற்றி அனைவருமே அறிந்திருப்போம்.

உண்மையில் ஸ்ரீ ராமர் தலைமையில் பாலத்தை முன்னின்று கட்டியவர்கள் இருவர். ஒருவர் நளன்(வெள்ளை வானரம்), இன்னொருவர் நிலா (நீல வானரம்). நளன் விஸ்கர்மாவிற்கும் வானரத்திற்கும் பிறந்தவர். சிறந்த கட்டிட கலைஞர். நளனே ராமர் பாலத்தை முன்னின்று கட்டினார். கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் இந்தியாவின் இணையற்ற பக்திக் காவியம் ராமாயணம். பல மொழிகளில் பலவகை ராமாயணங்கள் வழக்கத்திலிருந்து வந்தாலும், எல்லா ராமாயணங் களுக்கும் மூலமாக இருப்பது வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணமே. சம்ஸ்கிருத மொழியின் சாசுவதமான புகழுக்கு உரிய காவியம் ராமாயணம். வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டப்பகுதியில் அத்தியாயம் 22-ல் சேது பந்தனம் என்னும் பிரிவில் ஸ்ரீராமபிரானின் வானர சேனைகள் கூடி இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாலத்தைக் கட்டிய தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.. அதாவது ராமனுக்கு உதவி செய்த சுக்ரீவனின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். வானர வீரரான இவர், சிறந்த போர் வீரராக இருந்தார். இலங்கை சென்று சீதையை மீட்க வேண்டுமானால், கடலைக் கடக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

அந்த நேரத்தில் ஒரு முனிவரின் சாபத்தால் ‘எதை கடலில் எறிந்தாலும் அது மிதக்கும்’ என்று சாபம் பெற்றிருந்த நளன், கடலின் நடுவே பாலம் அமைக்க முன் வந்தார். தன்னைப் போலவே சாபம் பெற்றிருந்த நீலனுடன் சேர்ந்து அவர் பாலம் அமைக்கத் தொடங்கினார். அதன்படி மற்ற வாரன வீரர்கள் பாறைகளை கொண்டு வந்து குவிக்க, அவற்றை நளனும், நீலனும் தங்கள் கரங்களால் கடலில் போட்டனர். அந்த பாறைகள் மிதந்தன. இவ்வாறாக கடலில் பாலம் அமைக்கப்பட்டது. ராவண யுத்தத்தில், அசுர படை தளபதிகளில் ஒருவரான தபனன் உள்பட பல அசுரர்களை, நளன் அழித்தார். அதே நேரம் ராவணனின் மகன் இந்திரஜித் வீசிய அம்பு ஒன்று, நளனை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். அதற்கு வானர ராஜன் சுக்ரீவன் படைக்கு தளபதியாக இருந்த நிலா அவர்களும் துணையாக இருந்தார் என்கிறது ராமாயணம்.

ஆக எந்த கருணாநிதி ராமர் பாலத்தை பற்றி கேள்வி கேட்டாரோ அவரின் கொள்ளு பேரக்குழந்தைகளின் பெயர் வாயிலாகவே பதிலளித்துள்ளார் ராம பிரான். நளன் நிலா பற்றி எல்லாம் பாரம்பரியமாக பக்தி சார்ந்து இயங்கும் குடும்பத்திலுள்ள பலருக்கே தெரிவது அரிது. ஆனால் கருணாநிதி குடும்பம் அறிந்து வைத்திருக்கிறது.

இதெல்லாம் அரசியலப்பா!

நிலவளம் ரெங்கராஜன்!

error: Content is protected !!