October 16, 2021

கலைஞர் கருணாநிதி என்னும் கழக விருட்சம் சாய்ந்தது!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க் கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவையடுத்து, தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடம் ஒதுக்க முடியாது எனவும், பல சட்ட சிக்கல்கள் உள்ளது. காமராஜ் நினைவகம் அருகே 2 ஏக்கர் நிலம ஒதுக்கப்டும் என தமிழக அரசு தெரிவித்த நிலையில்  கலைஞரை புதைக்க மெரினாவில்தான் இடம் வேண்டும் என்று திமுக பிடிவாதம் பிடித்து கோர்ட் படியேறி இருப்பது அரசியலில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

1924 ஜூன் 3-ஆம் நாள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்த அவருக்கு வயது 94. முன்னதாக திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு மாணவப் பருவத்திலேயே பொது வாழ்க்கைக்கு வந்த கருணாநிதி, பெரியாருடன் உண்டான கருத்து வேறுபாட்டால் அண்ணா துரை திமுகவை தொடங்கியபின், திமுகவில் இணைந்து, அதன் முன்னணி தலைவர்களில் ஒருவ ராக இருந்தார். ஜூலை 27, 1969 அன்று திமுக தலைவராக பதவியேற்றுக்கொண்டார் கருணா நிதி. கடந்த ஜூலை 27 அன்று அப்பதவியில் 49 ஆண்டுகளை நிறைவு செய்து 50ஆம் ஆண்டில் அடியெ டுத்து வைத்தார். மேலும் 1969இல் சி.என்.அண்ணாதுரை மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச் சராக பதவியேற்றுக் கொண்ட அவர் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்துள்ளார். கருணா நிதி தாம் போட்டி யிடாத 1984 சட்டமன்றத் தேர்தல் நீங்கலாக, 1957 முதல் நடைபெற்ற 13 சட் டமன்றத் தேர்தல் களிலும் வெற்றி பெற்றவர்.

1957-ஆம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் அவர் முதல் முறையாக வெற்றி பெற்றார். கடைசியாக 2016 சட்டமன்றத் தேர்தலில் அவர் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்டு வென்றார். 1984 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அந்த ஆண்டு அவர் சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அரசியலில் மட்டுமல்லாது திரைத் துறையிலும் வெற்றிகரமான கதையாசிரியராகவும், வசன கர்த்தாவாகவும் கருணாநிதி விளங்கினார். அவரது தலைமுறையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்கள் கருணாநிதி கதை, வசனம் எழுதிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் தன் வரலாற்றை ஐந்து தொகுதிகளாக எழுதியுள்ள கருணாநிதி, பல உரைநடை மற்றும் கவிதை நூல்களையும் எழுதி யுள்ளார். ‘உடன்பிறப்புக்கு கடிதம்’ எனும் தலைப்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரபலமானவை.

ஓய்வெடுக்காமல் அரசியல் களப்பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருந்து வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர் களால் அவருக்கு கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே அவர், காவேரி மருத்துவ மனையில் கடந்த மாதம் 28-ம் தேதி அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை 7 அறிக்கைகள் மருத்துவமனை சார்பில் வெளியிடப் பட்டிருக்கின்றன. நேற்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கருணாநிதி உயிரிழந்துவிட்டதாகக் காவேரி மருத்துவமனை தரப்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், உடல்நிலை ஒத்துழைக்காததால் இன்று (7.8.2018) மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் உயிர் பிரிந்தது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை இழந்து விட்டோம். உலகத் தமிழர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதிக்கு தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகிய மனைவிகள் உள்ளனர். மு.க.முத்து, மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மகன்களும் செல்வி, கனிமொழி ஆகிய மகள்களும் உள்ளனர்.

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கியுள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இன்று (7.8.2018) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, முரசொலி செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அந்த சந்திப்பின்போது முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டபேரவை உறுப்பினருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செய்யும் பொருட்டு ஒதுக்கவும், காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அன்னாரை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் பரிசீலனை செய்தார். இதனிடையில் கருணாநிதி மறைந்த செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக் கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.

அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்” என்று கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத திமுக   நீதிமன்றத்தில்  முறையிட்டது. இதையடுஹ்து திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.