December 6, 2022

கருணாநிதி இதே தேதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்றுக் கொண்டார்!

முதல் அமைச்சராக இருந்த அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சைகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட நிலையில் 3 பிப்ரவரி 1969 அன்று அண்ணா மரணம் அடைந்தார். இதையடுத்து தி மு க தலைவர் மறைந்து விட்டார் என்பதைக் காட்டிலும் தமிழகத்தின் முதலமைச்சர் மறைந்து விட்டாரே – அடுத்தாப்லே யாரு பொறுப்புக்கு வருவார் என்று அரசியல் வட்டாரத்தில் அதிகமாக அலசப்பட்டுச்சி.

அதுக்கிடையிலே சீனியாரீடி முறைப்படி அண்ணாவுக்கு அடுத்து அமைச்ச ரவையில் மூத்தவரான நாவலர் நெடுஞ்செழியன் தாற்காலிக முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். எனினும், இது இடைக்கால ஏற்பாடுதான் சீக்கிரமா திமுகவின் சட்டமன்றக்குழுத் தலைவர் முறைப்படிதேர்வு செய்யப்படுவார்-ங்கற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

இதுக்கப்புறம் வழக்கம் போல திமுகவுக்குள் பல்வேறு குழப்பங்கள், கூட்டுப் பேச்சுகள், சர்ச்சைகள் எல்லாம் தொடங்கிடிச்சி. டெம்ப்ரவரி முதல்வரான நெடுஞ்செழியனே முதல்வரா கண்டினியூ ஆவார் என்று ஒரு குரூப் சொன்னாஙக். நோ சான்ஸ்.. கருணாநிதிதான் நெக்ஸ்ட் முதல்வர் என்ற கருத்தும் எழுந்தது. இப்படியொரு சேதியை பரப்ப தனி டீமே இருந்ததாக சொல்வார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுகவின் சட்டமன்றக் குழுவுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 9 பெப்ரவரி 1969 அன்னிக்கு சென்னை அரசினர் தோட்டத்தில் கூடிச்சி. திட்டமிட்டப்படி தலைவர் பதவிக்கு பொதுப்பணித்துறை அமைச்சரான கருணாநிதியின் பெயரை அமைச்சர் கே.ஏ. மதியழகன் முன்மொழிந்தார். அமைச்சர் சத்தியவாணி முத்து வழிமொழிந்தார். அடுத்து, நாவலர் இரா. நெடுஞ்செழியனின் பெயரை எஸ்.ஜே. ராமசாமி முன்மொழிய, வி.டி. அண்ணாமலை வழிமொழிந்தார்.

இதுலே நாவலர் கட்சியில் மூத்தவர். அனுபவம் வாய்ந்தவர், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் பலவற்றில் இருந்தவர். முக்கியமாக, அண்ணாவின் நம்பிக்கையைப் பெற்றவர்.அண்ணா இருந்தபோதே கட்சியின் பெரிய பொறுப்பான பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர். இவருதான் முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் -அப்டீன்னு ஒருப் பக்கம் டாபிக்

இன்னொருபக்கம், கருணாநிதி என்ன லேசுப்பட்டவரா? ஒட்டு மொத்த கட்சிக்குள் நல்ல செல்வாக்கான. சுறுசுறுப்பான இளைஞர். கடுமையான உழைப்பாளி. கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிப்பதில் ஸ்கோர் பண்ணியவர். தொண்டர்கள் மத்தியில் நன்கு செல்வாக்குள்ளவர்- அப்ப்டின்னு டிஸ்கசன்.

ஆக போட்டி ஏற்பட்டுவிட்டது.

அதுனாலே வாக்கெடுப்பு நடத்தவேண்டிய சூழல்.

அப்போ திடீரென நாவலர் எழுந்திரிச்சி. ‘தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஒரே மனதாக என்னைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டுமே நான் தேர்தலில் நிற்பேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்துள்ளேன். எனக்குப் போட்டி ஏற்பட்டுவிட்ட நிலையில், நான் போட்டியிட விரும்பவில்லை. போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ அப்ப்டீன்னு சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்த அறையில் இருந்தும் வெளி நடப்பு விட்டார் .

இதுனாலே கூட்டத்தில் லேசான சலசலப்புகள் ஏற்பட்டன. ஆனாலும், மெயின் போட்டியாளர் விலகிக் கொண்டதால் திமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக கருணாநிதி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுக்கிடையிலே உண்மையில் நெக்ஸ்ட் சி எம் யார் என்ற பேச்சு எழுந்தவுடனேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் கூப்பிட்டு டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சவர் எம்.ஜி.ஆர்தானாம்.

அப்படி பலரிடம் பேசப்பேச பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கருணாநிதிக்கு இருப்பது எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது. அதுனாலே, முடிவெடுக்க முடியாம இருந்தவங்களையும் கருணாநிதியின் பக்கம் திருப்பத் தொடங்கினார். அதை எம்.ஜி.ஆரே பின்னாளில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பதிவுசெய்தார்.

இது குறித்து நாவலர் தன்னோட சுயசரிதையில் ‘கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்தார்’ அப்படீன்னு எழுதியிருக்கிறார்.

ஆக, அடுத்த முதலமைச்சராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. அந்த அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவது என்ற அடுத்த ஹாட் டாபிக் எழுந்தது.

இதுக்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாவலர், “‘நான் திமுக சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றுவேன். கருணாநிதி அமைக்கப்போகும் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன். எப்போதும்போல் கழகத் தொண்டினை ஆற்றிக்கொண்டு வருவேன்.” அப்ப்டீன்னாரு

அதிருப்தி காரணமாக அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் நாவலரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள விரும்பினார் கருணாநிதி.

அதுனாலே கருணாநிதி சொல்லி உடனடியாக என்.வி. நடராசன், ப.உ. சண்முகம், ஏ. கோவிந்தசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று நாவலரிடம் பேசினர். அத்தோட பெரியாரும் நெடுஞ்செழியனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார். இந்த நெருக்கடியான நேரத்தில் நாவலரும் மற்றவர்களும் கண்ணைமூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்கவேண்டும் என்றார் பெரியார்.

இதுனாலே கொஞ்சம் அப்செட்டாகி போன நாவலர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று தன்னுடைய அறையைக் காலி செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டார்.

அதை உடனடியா தெரிஞ்ச க. ராசாராம் கருணாநிதிக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டார்.

உடனடியாகக் கோட்டைக்கு வந்த கருணாநிதி, நேரே நெடுஞ்செழியனின் அறைக்குச் சென்று அவரிடம் உருக்கமா பேசினார். நீங்க டெபுடி சி எம் போஸ்டை ஏற்றுக்கொள்ளுங்கள். அவை முன்னவராகவும் நீங்களே இருங்கள் வேணும்னா சட்டமன்றத்தில் உங்களுக்கு அடுத்த இருக்கையில் நான் உட்கார்துகிறேன் என்றெல்லாம் சொல்லி நெடுஞ்செழியனின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

ஆனாக்க நாவலரோ பிடி கொடுக்கவில்லை. ’நான் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரமாட்டேன்; ஒரு முடிவுக்கு வந்தால் மாறமாட்டேன்’ ன்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

இதைத் தொடர்ந்துதான் 10 பிப்ரவரி 1969 அன்று கருணாநிதி தலைமையில் திமுக அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது

©தகவல் உதவி : கட்டிங் கண்ணையா!