August 4, 2021

தெரியுமா சேதி.. தியேட்டர்களில் கர்ணன் அலை ஆரம்பமாயிடுச்சு!

லைப்புலி தாணு தயாரிப்பில்  தனுஷ்  நடிப்பில்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி நாளை ரிலீஸாக இருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இந்த ’கர்ணன்’ படத்தின் போஸ்டர்கள், மற்றும் பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ததோடு ரசிகர்கள் மட்டும் இன்றி, திரையுலகினரிடமும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

மேலும், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு திரையரங்குகளுக்கு மக்களின் கூட்டத்தை வர வைத்த விஜய்-யின் ‘மாஸ்டர்’ படத்தைப் போல தனுஷின் ‘கர்ணன்’ படமும் திரையரங்குகளுக்கு அனைத்து தரப்பினரையும் அழைத்து வரும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். காரணம், நேற்று தொடங்கிய ‘கர்ணன்’ படத்தின் டிக்கெட் முன் பதிவு தானாம். ஆம்.. இந்த கர்ணனைக் காண தமிழ் நாட்டில் சுமார் இரண்டரை லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரெஜிஷா விஜயன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் நடித்த ‘ஜுன்’ படம் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிடித்திருந்தது. இதனால்தான் ‘கர்ணன்’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சார் அலுவலகத்திற்கு சென்று கதை கேட்டேன். கதை கேட்டவுடன் பிடித்ததால் உடனே ஓகே சொல்லி விட்டேன்.

மேலும் ஒரு படத்தில் நடிக்க நம்மகு பிடிச்ச ரோல்தான் முக்கியமே தவிர காஸ்டியூமோ, அலங்காரமோ தேவையில்லை. உடல் தோற்றத்திற்கு ஏற்றாற்போல் காஸ்டியூம் இருந்தால் மட்டும் போதுமானது. நான் இந்த படத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயக்குனர்தான் உருவாக்கினார். இந்த படத்தில் எனக்கு மேக்கப் கிடையாது. ஷூட்டிங் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே அந்த கிராமத்திற்கு போ விட்டேன். இதனால் அங்கு உள்ள மக்களால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிட்டேனாக்கும்  என்று தெரிவித்திருந்தார்.