• Latest
  • Trending
  • All
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்துக்கு வயசு 20!

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்துக்கு வயசு 20!

10 months ago

சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!

8 hours ago

குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு!

8 hours ago

எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்!

8 hours ago
தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா

தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா

8 hours ago

9, 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

9 hours ago

புதுச்சேரியிலும் ஜனாதிபதி ஆட்சி அமல்!

10 hours ago
ஸ்டார் விஜய்யில்  ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

ஸ்டார் விஜய்யில் ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

1 day ago
“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

1 day ago
சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??

சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??

1 day ago
25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

2 days ago
திஷா ரவிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்!

திஷா ரவிக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன்!

2 days ago
இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!

இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!

2 days ago
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
Friday, February 26, 2021
  • Login
AanthaiReporter.Com
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
No Result
View All Result
AanthaiReporter.Com
No Result
View All Result
Home Running News2

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்துக்கு வயசு 20!

இப்படம் ரிலீஸாகி இன்னியோட 20 வருஷமாகுது.. இந்த சூழலில் இதோ கட்டிங் கண்ணையா-வில் சிறப்பு கட்டுரை-

May 5, 2020
in Running News2, சினிமா செய்திகள்
0
555
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

1997இல் மின்சார கனவுக்குப் பிறகு, பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது. ஒரு நாவலின் (Sense and Sensibility by Jane Austen) தழுவலில் வெளிவந்தது இந்தப் படம். கொஞ்சம் விரிவாக சொல்வதானால் ராஜீவ்மேனன் தனது முதல் முயற்சியான மின்சாரகனவு(1997) படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவால் 1998-ன் இறுதியில் ஒரு திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார்.இதை அடுத்து நவம்பர் 1998-இல் தீக்குள் விரலை வைத்தால் என்ற தலைப்பில் தனது தயாரிப்பு பணிகளை தொடங்குவதாக அறிவிச்சார். அந்தத் தலைப்பு சுப்ரமணிய பாரதியார் எழுதிய வரிகளிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

பின்னர்,தொடர் டிஸ்கஷனுக்கு அப்பாலே ராஜீவ் மேனன் இப்படத்துக்காக ஒரு பெரிய கதைக்களத்தை பிடிச்சார். அதுதான் மேலே சொன்ன ஜான் ஆஸ்டின் நாவலான Sense and Sensibility அடிப்படையில் திரைக்கதையை புதுசா ஸ்கிரிப்ட் செய்தார். கூடவே இப்படத்திற்கு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என பெயர் மாற்றம் செஞ்சார். இப்படத்தில் பிரதிபலித்த இரண்டு சகோதரிகளின் கதை, அவரையும் அவரின் சகோதர்களின் வாழ்க்கை யின் கடிமான பகுதியையும் நினைவூட்டுவதாக இருந்தது என மேனன் பிறிதொரு சமயம் சொன்னர்.

தாணு படமாச்சே.. அதுனாலே படம் ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பன்மொழி திட்டமாக தொடங்கப்பட்டது. இருப்பினும் இது தமிழில் மட்டும் வெளியாச்சு. பிறகு தெலுங்கில் பிரியுராலு பிளிச்சிண்டி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. மேனன் இதன் கதையை முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். பிறகு மலையாளத்தில் உரையாடலை ட்ரான்ஸ்லேட் செஞ்சார். அது பலருக்கும் பிடிபடாம போனதாலே ஜாம்பவான் ரைட்டர் சுஜாதா இதை தமிழில் மொழி பெயர்த்தார்.

நவம்பர் 1999-இல் படத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் முடிந்த பின், மேனன் தன் முந்தைய படம் பி & சி -யில் ஓடத் தவறியதை தொடர்ந்து, இப்படத்தின் சுவையான காட்சிகளை கிராமப்புற மக்களுக்கு முன்னோட்டமிட வேண்டும் என்று விரும்பி உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள பார்வையாளர்களுக்கு படத்தின் சில பகுதிகளை காட்டினர்,

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் கலந்து கொண்டார். ஒரு வழியா முடிஞ்சு ஆரம்பத்தில் 1999-அன்று தீபாவளி பருவத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், சில தாமதங்களால் தயாரிப்பாளர் படத்தை ஜனவரி 1, 2000-ஆண்டு வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனா மேலும் மேலும் தாமதமாகி இதே மே 2000-அன்று 5ம் தேதி ரிலீஸாச்சு.

இதில் இசைக்கும் கலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இயல்பாகவே நல்ல ரசனை மிகுந்தவர் ஆகையால் திரைப்படத்தையும் சித்திரமாய் செதுக்கி இருந்தார். இன்றைய பெரும்பாலான தமிழ் சினிமாவுக்கே உரிய ஆடம்பரங்களும் ‘cliché’களும் இல்லாமல் ஒரு சராசரி வாழ்க்கை பயணத்தைக் படமாக எடுத்திருந்தார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களைப் படத்தில் கதை மாந்தர்கள் எதிர்கொண்டது போல் காட்டி இருப்பார்.

ஏ ஆர் இசையும், இந்தப் படத்தின் மிகப் பெரிய பக்கபலம். 19 வயதாகி விட்டன இந்தப் பாடல்களை நம்மில் பெரும்பாலோர் இன்னும் கேட்டு ரசிக்கிறோம். ஏ ஆரின் ‘golden hits’ இவை.

பல பிரபலங்கள் சேர்ந்து நடித்த படம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே, அன்றைய திகதியில் கொடி கட்டிப் பறந்த பிரபலங்கள் இந்த ‘multi-starrer’ படத்தில் நடிக்கச் சம்மதித்தது ஆச்சரியமாய் இருந்தது.

அப்போது, நடிகர் மம்முட்டி 3 முறை தேசிய விருதுகளோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்றிருந்தார்.

நடிகர் அஜீத் சொல்லவே வேண்டாம்..

நடிகை ஐஸ்வர்யா ராய் 1994இல் உலக அழகி பட்டம் வென்று, 1997இல் இருவர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின், 1998இல் ஜீன்ஸ் முடித்து 1999இல் Hum Dil De Chuke Sanam by Sanjay Leela Bhansali படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றிருந்தார்.

நடிகை தபு இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். அவர் நடித்து இதே மாதிரியான genreஇல் வெளிவந்த Hum Saath Saath Hain (1999) திரைப்படம் ₹1 billion சம்பாதித்து All Time blockbuster by Box Office India என்று அறிவிக்கப்பட்டது.

நடிகர் அப்பாஸ் உம் அந்தக் காலக் கட்டத்தில் பிரபல இரண்டாம் கதாநாயகனாய் வலம் வந்து கொண்டிருந்தார்.

அவரவரின் பிரபல முகங்களைப் பிரதிப்பலிக்காமல் கதாப்பாத்திரம் ஏற்று எதார்த்தமாய் நடித்திருந்தனர். அனைவரையும் சரியான, தேவையான அளவில் ‘accommodate’ செய்திருந்தார் ராஜீவ். நடிகைகளைக் காட்சி பொருட்களாய் வைக்காமல் முழு கதையும் அவர்களைச் சார்ந்து வரும்படி முதன்மை பாத்திரங்களாய் அமைத்திருந்தார். குடும்ப பாரத்தைப் பெண்களும் சுமப்பதோடு சுய மரியாதையுடன் மிகத் திறமையாகவே வழி நடத்துவர் என்று காட்டி இருந்தார்.

எப்படி இது சாத்தியமாச்சு-ன்னு ராஜீவ் மேனனிடம் கேட்டப்ப்போது, “தபுவைத் தான் முதலில் ஒப்பந்தம் செய்தோம். அவருக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது. அவரது தங்கை கதா பாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதில்தான் தடைகள் இருந்தன. முதலில் மஞ்சு வாரியரை அணுகினேன். அவருக்குக் கதாபாத்திரம் பிடித்திருந்தது. ஆனால் தனது முடிவைச் சொல்லாமல், தாமதம் செய்தார். அதன் பிறகு நான் சவுந்தர்யாவிடம் பேசினேன். ஒரு விளம்பரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியதால் எனக்கு அவரை முன்னரே தெரியும். ஆனால் சவுந்தர்யாவின் சகோதரர் படத்தின் க்ளைமேக்ஸ் என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் க்ளைமேக்ஸை நாங்கள் முடிவு செய்யவில்லை.

படப்பிடிப்புத் தேதி நெருங்கிக்கொண்டே வந்தது. எனக்குப் பதற்றம் அதிகரித்தது. ஒரு நாள் திடீரென என் மனைவி ஐஸ்வர்யா ராயின் பெயரைச் சொன்னார். ஐஸ்வர்யா ராய்க்கு குறைவான நேரமே இருந்தாலும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே அதற்கு ஏற்றார் போல தேதிகளைச் சமாளித்துக் கொண்டார்”.

இப்படத்தில் பிரபு தேவா கமிட் ஆன ரோலில்தான் அஜித் நடிச்சார். அதே கேரக்டரில் நடிக்க முதலில் பிரசாந்தைத் தான் போய் பார்த்து பேசினோம். ஆனால் அவர் தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் இருந்தால் நல்லா இருக்கும் -முன்னு சொன்னார். அதுனாலே அவரைக் கண்டுக்காம வேற சாய்ஸ் யாருன்னு அலசினப் போது அஜித்தின் பெயர் வந்துச்சு. யார் அவரை ரிமைண்டர் பண்ணினா?-ன்னு நெனவில்லை.. ஆனா எல்லாருக்கும் பெட்டர் சாய்ஸா இருந்ததாலே அஜிதை பார்க்க ட்ரை பண்ணினேன்.. அப்போ அவர் ஆக்சிடெண்டாகி ஹாஸ்பிட்டலில் இருந்தார். நான் அவரை ஹாஸ்பிட்டலில் மீட் பண்ணித்தான் கதையைக் சொன்னேன்.

அந்த படத்தில் கமிட் ஆகும் போது அஜித்- . வாலி (1999), அமர்க்களம் (1999) போன்ற ‘blockbuster’ திரைப்படங்கள் முடித்து கோலிவூட்டில் தனக்கான பெயர் பதித்திருந்தார். ஆனாலும் ஷூட்டிங் போது ஐஸ்வர்யா ராய். மாமூட்டி எல்லாம் ஒன்றாக இருப்பார்கள் இவர் மட்டும் தனியாக உட்காந்திருப்பார் ..கேரவன் எல்லாம் வந்த புதுசு, அப்போ ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும் தான் கேரவன். மற்றபடி மம்முட்டி, அப்பாஸ், அஜித் என்று யாருக்கும் கேரவன் இல்லை. அதனால் அங்கே காரைக்குடி வீட்டில் பெரிய டைனிங் ஹாலில் தான் படத்தில் பணிபுரிந்த அந்த முக்கிய 25 பேரும் சாப்பிடுவோம். அப்போது கூட அஜித், வராண்டாவில் தான் சாப்பிடுவார். அங்கே ஒரே ஒரு அசிஸ்டன் உடன் தான் அவர் அமர்ந்து சாப்பிட்டார்.. (கட்டிங் கண்ணையா_)

இந்தப் படத்துடன் விக்ரமுக்கு ஒரு தொடர்புள்ளது. அவர் தான் அப்பாஸ் கதாபாத்திரத்துக்குப் பின்னணி பேசினார். அதற்கு முன் அவருடன் நான் விளம்பரங்களில் பணியாற்றியிருந்தேன். அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இத்தனைக்கும் ‘பம்பாய்’ படத்தில் அவருக்காக நான் பரிந்துரை செய்தேன். ‘மின்சாரக் கனவு’ எடுத்துக் கொண்டிருக்கும்போது பிரபுதேவாவுக்காக ஒரு புதிய குரலை தயாரிப்பாளர்கள் கேட்டனர். நான் விக்ரமை பின்னணி பேசச் சொன்னேன். அதன் பிறகு அப்பாஸுக்கும் பின்னணி பேசி உதவினார். விக்ரமும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படீனெல்லாம் சொல்லி இருந்தார்

ஒரு வழியா இந்த படம் தமிழ்நாட்டில் 150 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. டம் கேரளாவிலும் வெற்றி பெற்றுச்சாக்கும். கூடவே பல்வேறு நாடுகளில் மதிப்பாய்வுய்க்காக திரையிடப்பட்ட க.கொ. க். கொ. இன்னிக்கும் நல்ல பீஸ்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை

Tags: kalaipuli dhanukandukonden kandukondenkkkk
Share222Tweet139Share56

Latest

சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!

February 25, 2021

குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு!

February 25, 2021

எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்!

February 25, 2021
தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா

தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா

February 25, 2021

9, 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

February 25, 2021

புதுச்சேரியிலும் ஜனாதிபதி ஆட்சி அமல்!

February 25, 2021
ஸ்டார் விஜய்யில்  ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

ஸ்டார் விஜய்யில் ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

February 24, 2021
“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

February 24, 2021
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In