August 12, 2022

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் – கமல் வெளியிட்டார்!

மிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியலை முதல் கட்சியாக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்கள் கட்சி தொண்டர்களிடம் விருப்ப மனு பெற்று நேர்காணல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளுடன் தமிழக நகரங்கள் அல்லாடுகின்றன. இவைகளைத் தீர்க்கும் தகுதியும் திறனும் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டு முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், #தேடிதீர்ப்போம்வா என்ற ஹேஷ் டேக் பதிவிட்டுள்ளார்.