கமல்ஹாசனின் ‘விக்ரம்’ புரோமோஷன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ புரோமோஷன் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்துள்ள ‘விக்ரம்’ படம், வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் பேசியது இதுதான்:

“நான்கு வருடம் என்னுடைய ரசிகர்களை காத்திருக்க வைத்த தற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். படத்தில் கூட லோகேஷ் இப்படி என்னை வேலை வாங்கவில்லை. அவருக்கு நன்றி சொன்னால் அவர் அந்நிய பட்டு விடுவார். அவர் கோபித்து கொள்வார்.

நான் சினிமாவின் ரசிகன். அதனால்தான் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் தயாரிக்கவும் ஆரம்பித்தேன். ‘விக்ரம்’ படத்தை ஒரு நல்ல படமாக தயாரித்துள்ளேன். இதற்கு முன்பு நான் நடித்து தயாரித்த படங்களின் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் சினிமாவுக்கே செலவு செய்தேன். ஆனால், சிலர் லாபமாக வரும் பணத்தைக் கொண்டு ஓட்டல் கட்டலாம், மால் கட்டலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். ஒரு விவசாயி தன் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வது போலவே நான் சினிமாவில் முதலீடு செய்தேன்.

ஆனால், இப்போது என் பணத்தை மக்களுக்காகவும் முதலீடு செய்ய வேண்டியது இருக்கிறது. நலப்பணிகளுக்கு நான் ஒரு ரூபாய் செலவு செய்தால்தான், எனது ரசிகன் 20 ரூபாய் செலவு செய்வான். அதற்காகத்தான் படங்களில் நடிக்கிறேன். 1,000 படங்களில் நடிக்க ஆசை இருந்தாலும், என்னால் இயன்றவரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும்.

கலைஞர் பற்றி சினிமாகாரனாக பேச 1000 உள்ளது. ஆனால் அவர் பிறந்த நாள் அன்று படம் வெளியாவது எதிர்பாராமல் அமைந்தது. நான் தசாவதாரம் படம் எடுத்த போது அவரே படம் செய்வது போல என்னிடம் கதையை கேட்டார். என் திறமையை வளர்த்து கொள்ள முன்னோடியாக இருந்ததில் கலைஞரும் ஒருவர். அவரே முதலீடு செய்தது போல் என்னுடைய கதையை கலைஞர் இருந்து கேட்பார். கலைஞர் சொன்னது என் மனதில் ரீங்கரித்து கொண்டே உள்ளது .

விக்ரம் 3க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர். அது நான் முடிவு செய்து விட்டேன்.

மேலும் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே வரிகளின் கேள்விக்கு பதில் அளித்த அவர், பத்திரிகையாளர் எல்லாம் கூடியிருக்கும் இடமும் ஒன்றியம் தான், இயக்குநர் ஒன்றியத்தில் தவறு நடந்தால் கூட படம் கெட்டு போகும். நடிகர்கள் ஒன்றியத்தில் கூட தவறு நடந்தால் கூட படம் வெற்றி பெறாது. இதை இவ்வாறு எடுத்து கொள்ளலாம் .

அப்புறம் அந்த ‘இந்தியன் 2’ படம் கண்டிப்பாக வெளியாகும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். பேட்டியின் போது லோகேஷ் கனகராஜ் உடனிருந்தார்

error: Content is protected !!