August 8, 2022

கமல் கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர். காத்திருந்தாரா?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சமீபத்தில் துவங்கியது. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடையே உரையாடுவார். இதையடுத்து ஒவ்வொரு போட்டியாளரும் கமல்ஹாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அப்போது நீங்கள் தவறவிட்ட வாய்ப்பு எது? என்ற கேள்வியும் அதில் இடம்பெற்றிருந்தது.

அந்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், எம்.ஜி.ஆர் உடன் ‘நாளை நமதே’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. அந்தப் படத்துக்கு சேதுமாதவன் தான் இயக்குநர். என்னுடைய கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர் ஒரு மாதம் காத்திருந்தார். ஆனால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதுவும் எம்.ஜி.ஆர்-க்கு தம்பியாக நடிக்கும் கேரக்டர் அது. யோசித்துப் பாருங்கள்.

அப்போது அவருடன் நாளை நமதே படத்தில் டான்ஸ் ஆடி பாட்டுப் பாடி இருந்தால் இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும். நாளை நமதே என்ற வாசகத்தைத் தான் இப்போது பயன்படுத்தி வருகிறேன். அப்போது எம்.ஜி.ஆர் உடன் நடித்திருந்தால் இப்போது நான் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தப் பாடலையும் முடிந்தால் படத்தையும் போட்டு காட்டியிருக்கலாம். இப்போது யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய இழப்பு என தோன்றுகிறது” என்றார்.

ஆக. ”நாளை நமதே படத்தில் நான் தம்பியாக நடிக்க என் கால்ஷீட்டுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் காத்திருந் தார்”னு உலக நாயகன் கமல் சொல்லியிருக்காரு.. அந்த படத்தை டைரக்ட் பண்ண கேஎஸ் சேதுமாதவன் கிட்ட கேக்கலாம்னு பார்த்தா அவருக்கு 88 வயசு ஆவுது. உண்மையை சொல்லுவாரோ மாட்டோரோ?

அந்த படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் சிலரிடம் 90களில் பேசியபோது கிடைத்த தகவல் களின் அடிப்படையில் சில ஆண்டு களுக்கு முன்பே இது பற்றி நாம் பதிவு போட்டிருக்கிறோம். இங்கே சொல்லப்போகிற அத்தனை விஷயங்களும் அடிக்கடி சொன்னவைதான்.

கேஎஸ் சேதுமாதவன்தான் கமலை முதலில் கன்யா குமாரின்ற மலையாள படத்தில் ஹீரோவாக் கியவர். இன்னும் கேட்டால் 1962லேயே மலையாளத்தில் கமலை சிறுவனாய் அறிமுகப் படுத்தியவரும் சேதுமாதவன்தான். மிகப்பெரிய ஜாம்பவான் டைரக்டர்

அப்பேர்பட்டவர் கமலோட கால்ஷீட்டுக்காக எம்ஜிஆரோடசேர்ந்து ஒரு மாதம் காத்திருந்தாரா?

நாளை நமதே படம் ஆரம்பித்த 1974ல் கமல் அவ்ளோ பிசியான லீடிங் ஆர்ட்டிஸ்டா? ஒன்னுமே புரியலை..

இங்கே ஒரு முக்கியமான விஷயம்.. நடிகர் என்ற வகையில் எம்ஜிஆர் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பார். தன்னை மீறுகிற அளவுக்கு ஆண் பாத்திரம் எதுவும் அமைந்துவிடக்கூடாது என்று பார்த்துக் கொள்வதில் உஷார் பார்ட்டி.

கதாநாயகிகள் மட்டுந்தான் ரொம்ப ரொம்ப் இளசுகளா இருக்கணும். சின்ன வயசு ஹீரோக்களை கிட்ட விடவே மாட்டார்..

சிவாஜி, ஜெமினி போல் மற்ற முன்னணி நடிகர்களு டன் சகஜமாக நடிக்கும் குணம் எம்ஜிஆரிடம் கிடையாது.. கலங்கரை விளக்கம் படத்தில் கதையில் அதிகம் முக்கியத்துவம் பெறும் நண்பன் வேடத்திற்கே வி எஸ்.கோபாலகிருஷ்ணனைத்தான் போடச்சொன்னாரு..

ஐந்து படங்கள்ல எம்ஜிஆரோடு முத்துராமன் நடிச்சி ருந்தாலும், அத்தனையுமே கிட்டத்தட்ட வில்லன் ரோல்கள்தான். ஜெமினிகணேவன்கூட எம்ஜிஆருக்கு முகராசின்னு ஒரே படம். நாலு வயசு சின்னவரான ஜெமினியை தனக்கு அண்ணனா போட்டு படத்தில் டம்மியாக்கியிருப்பாரு தலைவரு.. அதெல்லாம் மிகப்பெரிய எஸ்டிடி.. போய்க்கிட்டே இருக்கும்

நாளை நமதே மேட்டருக்கு வருவோம். 1973ல் இந்தியா முழுக்க ஹிட் அடித்த யாதோன்கி பாரத் படத்தில் தர்மேந்திரா, விஜய் அரோரா தாரிக், என்று மூன்று ஹீரோக்கள். மூன்று பேருக்குமே நல்ல ஸ்கோப் இருக்கும்.

தமிழ்ல எம்ஜிஆர் சிவகுமார் கமல்ன்னு யோசனை இருந்ததாம். சிவகுமார் வந்திருந்தா அவருதான் லதாவை படம் பூரா உருட்டி டூயட் பாடியிருப்பாரு. எம்ஜிஆருக்கு அப்புறம் என்ன வேலை இருக்கு? சீனியர் தர்மேந்திரா ரோல்ல சிவகுமாரை போட்டுட்டு எம்ஜிஆர் சிவக்குமாருக்கு தம்பியா நடிக்க இருந்தாரோ? நமக்கு தெரியல..

கமலுக்கு வாய்ப்பு கிடைச்சிருந்தா, கிட்டாரை வெச்சி கிட்டு அன்பு மலர்களே நம்பியிருங்களேன்னு பாடிப் பாடி படத்துலே மேடையோடவே போயிருப்பாரு.. அவ்ளோதான்..

அதனால்தான் எம்ஜிஆர் உஷாரா எந்த யங் ஹீரோ வையும் கிட்ட சேர்த்துக்க கூடாதுன்னு முதல் ரெண்டு ரோலை அவரே எடுத்துகிட்டாரு., கிட்டாரை வெச்சி ஸ்டேஜ்ல மட்டுமே பாடிக்கிட்டு இருக்கிற ரோலுக்கு தெலுங்குல இருந்து சந்திரமோகனை கூட்டிக்கிட்டு வந்து போடச்சொன்னாரு. படத்துல சந்திரமோகனுக்கு ”இந்த பாட்டை பாடி பிரிஞ்சிபோன ரெண்டு இதயத்தை தேடிக்கிட்டு இருக்கேன்”னு சொல்றதுதான் அதிகபட்ச டயலாக்

அப்படிபட்ட எம்ஜிஆர், எப்படி பட்ட எம்ஜிஆர்? அதுவும் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் இதயக்க னின்னு அடுத்தடுத்து பிளாக் பஸ்டர்களை கொடுக்கிற காலத்தில் இருந்த நெம்பர் ஒன் எம்ஜிஆர், 1975ல் கமலுக்காக காத்திருந்தாரா?

1977ல் 16 வயதினிலே படம் வருவதுற்கு முன்புவரை, தமிழில் கமல் ஏராளமான படங்கள் நடித்து இருந்தாலும் முன்னணி கதாநாயகன் இல்லை, நமக்கு தெரிஞ்சி தமிழ்ல உணர்ச்சிகள், குமார விஜயம் பட்டாம் பூச்சி ன்னு ஹிட் அடிக்காத படங்கள்ல ஹீரோ.. அவ்வளவே.

அப்புறம் இங்கே இன்னொரு, மேட்டரு. யாதோன்கி பாராத் தெலுங்கு வெர்ஷன்ல என்டிஆர் இன்னும் படு உஷாரு.. கிட்டார் தம்பி ரோலுக்கு தன் பையன் பாலகிருஷ்ணாவையே போட்டு கிட்டாரு..

நமக்கு தெரிஞ்ச எஸ்டிடி இவ்ளோதான்..

யாதோன்கி பாராத் அளவுக்கு இல்லைன்னாலும் நாளை நமதே படம் பாக்கறா மாதிரி இருந்ததுக்கு ரெண்டே ரீசன்ஸ்தான்.

ஒன்னு எம்எஸ்வியோட மெகா ஹிட் சாங்ஸ்.. ரெண்டாவது படம் பூரா தொடைகளை பளிச்சின்னு காட்டிய லதாவோட மினி ஸ்கர்ட்டு..

மேட்டர் ஓவர்..!

ஏழுமலை வெங்கடேசன்