Exclusive

கள்ளன் பட தலைப்பு திருடன் என்ற பொருளிலேயே வைக்கப்பட்டுள்ளது!

யக்குனர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் பணியாற்றிய (நம்ம சகா வி கே. சுந்தரின் இல்லாள்) சந்திரா இயக்குனராக அறிமுகமாகும் படம், கள்ளன். இயக்குனர் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிச்சிருக்கும் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.


தமிழகத்தின் தனித்துவமான பத்திரிகையாளர் & எழுத்தாளரான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கும் கள்ளன் படம் விரைவில் ரிலீஸாகப் போகிறது. இதை ஒட்டி இன்று மதியம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.ரவிச்சந்திரன் வி.மதியழகனுடன் இயக்குனர் சந்திரா கலந்து கொண்டனர்.

சந்திப்பில் பேசிய சந்திரா தங்கராஜ், “எல்லா சமூகத்திலும் வேட்டை கலாச்சாரம் உண்டு. அப்படி வேட்டையாடும் தொழிலை பார்த்து வந்த நாயகன் வேட்டையாடும் வழக்கம் தடை செய்யப்பட்ட உடன் வாழ வழியின்றி வேறு சமூகக் குற்றங்களில் ஈடுபட அதன் விளைவு என்ன ஆகிறது என்பது கதை. ஏற்கனவே மந்திரப்புன்னகை படத்தில் ஹீரோவான கருபழனியப்பன் இந்த வேட்டையாடும் நாயகனாக வரும் பாத்திரத்துக்கு பொருத்தமானவராக தெரிந்தார். அதனால் அவரை நடிக்க கேட்டேன் அவரும் ஒத்துக் கொண்டு சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நான் சினிமாவைப் பயின்ற அமீரிடம் படம் இயக்கப் போகிறேன் என்று சொன்னபோது படம் இயக்குவது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. பலகாலம் பயிற்சி எடுக்க வேண்டும். உன்னால் முடிந்தால் அதை மேற்கோள் என்று கூறினார். அவர் அப்படிக் கூறியது அப்போது புரியவில்லை. இந்தப் படம் இயக்கி முடித்ததும் அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்து கொண்டேன்..!” என்றார்

படத்தை வெளியிடும் பி மதியழகன் பேசும்போது, “பெண் இயக்குனர்கள் அதிகமாக தமிழ்சினிமாவில் எடுபடவில்லை – ஓரிருவரைத் தவிர. ஆனால் ஒரு பெண் இயக்குனராக இந்த படத்தில் சந்திரா நிச்சயமாக வெற்றி பெறுவார். ஒரு எழுத்தாளர் எப்படிப் படம் எடுப்பாரோ அந்த வகையில் இந்தப் படம் அமைந்திருக்கிறது.

நீங்கள் பல படங்களைத் தயாரித்து வெளியிடுகிறீர்கள். ஆனால் என் படத்தை மட்டும் ஏன் இன்னும் வெளியிடவில்லை என்று சந்திரா கேட்டுக்கொண்டிருந்தது என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதற்கான வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இந்தப் படம் பற்றி செய்திகள் வரும்போதெல்லாம் இந்த தலைப்பை மாற்ற சொல்லி நிறைய மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் தலைப்பு திருடன் என்ற பொருளிலேயே வைக்கப்பட்டுள்ளது. ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக நிச்சயமாக இல்லை. அதைப் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை அதில் இந்த தலைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்..!” என்றார்.

aanthai

Recent Posts

டாடா – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=23mMdgo0prk

9 hours ago

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்…

10 hours ago

“பத்ம பூஷன் ” வாணி ஜெயராம் திடீர் மறைவு : தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…

1 day ago

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…

2 days ago

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…

2 days ago

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு

நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…

2 days ago

This website uses cookies.