November 28, 2021

உதயநிதிக்கு வேர்வையை துடைச்சு விட்டது தப்பாமில்லே!?

கொஞ்ச நாளைக்கு முன்பு ஸ்டாலின் Hand sanitizer உபயோகிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “பார்த்தீர்களா? மக்களுக்குக் கைகொடுத்துவிட்டு கையைக் கழுவுகிறார்,” எனப் பொங்கி எழுந்தார்கள் பல வெறுப்பாளர்கள். என்ன செயல் செய்தாலும், செய்யாமலே இருந்தாலும் கையை அடிக்கடிக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் பல நோய்களில் இருந்து காப்பாற்றும். நாமும் வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் கை கழுவுவோம், சாப்பிடும் முன் கை கழுவுவோம். இதெல்லாம் எல்லோர்க்கும் தெரியும். பல நூறு பேருக்கு கை கொடுக்கும் ஸ்டாலின் கழுவியது தவறா? ஆனாலும் அவர் ஸ்டாலின் அல்லவா? நொட்டை சொல்லியே ஆக வேண்டும் அல்லவா? அதனால் அப்படிச் சொன்னார்கள்.

இப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு வருவோம். நேற்று உதயநிதிக்கு பிரச்சாரத்தில் வியர்த்து ஊற்றியபோது ஒரு வேட்பாளர் தன் கர்ச்சீப்பில் துடைத்துவிட்டிருக்கிறார். இதையும் ஏதோ முதலாளித்துவம், ஆண்டான் அடிமை போலச் சித்தரிக்கின்றன சில சங்கி மற்றும் சங்கி ஆதரவு வெறுப்பாளர்கள்.

ஒருவர் இன்னொருவரிடம் அனுமதி கேட்காமலேயே அவரது முகத்தை ‘தன்’ கர்ச்சீப்பால் துடைத்துவிடுகிறார் என்றால் அவர்களுக்குள் எவ்வளவு உரிமை இருக்க வேண்டும். எனக்கு பிறர் கர்ச்சீப்பை உபயோகிக்கப் பிடிக்காது. நண்பனாக இருந்தாலுமே சற்று முகம் சுளித்திருப்பேன். ஆனால் உதயநிதி மிக இயல்பாக பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். அந்தக் காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு இயல்பாக, அன்பின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால் சிலருக்கோ அதைப் பார்க்கக் கண் வலிக்கிறது.

மேலும் கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு வேட்பாளர், பெண் வேட்பாளர் என்றே வைத்துக்கொள்வோம், ஜெயலலிதா முகத்தை தன் கர்ச்சீப்பால் துடைத்துவிடுகிறார். ஹை ஹீல்ஸ் பிய்ந்திருக்கும்!!! சரி. பெண் வேட்பாளர் ஒருவர் மாயாவதி முகத்தை தன் கர்ச்சீப்பால் துடைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். விளக்கமாறு பீஸ் பீஸாகப் பிய்ந்திருக்கும்! இதே கதைதான் மோடி, அமித்ஷா என எல்லோருக்கும். ராகுல் வேண்டுமானால் அதை இயல்பாக எடுத்திருப்பார். இடதுசாரிகளுக்கும் இது சகஜம். கலைஞருக்கு இது ஆயிரம் முறை நடந்துள்ளது.

மற்றபடி அடிமை ஓ.பி.எஸ்சின் அடிமை வாரிசு எம்.பி வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரன் கூட ராசுக்குட்டி பாக்யராஜ் போல குடைபிடிக்க ஒரு ஆளோடு சுற்றி வருகிறார். ஆனால் நடிகராக இருந்தும் உச்சி வெயிலில் நின்று பிரச்சாரம் செய்யும் உதயநிதிக்கு யாராவது அன்புமிகுதியில் வியர்வையைத் துடைத்து விட்டால் உங்களுக்கு எரிகிறது.

உண்மையைச் சொல்லவேண்டுமானால் திமுககாரர்களில் பெரும்பான்மையினர் உதயநிதியை மற்றொரு திமுககாரராகத்தான் பார்க்கிறார்கள். நீங்கள்தான் அவருக்கு அதீத முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்துகிறீர்கள்.

திமுகவை குறை சொல்லவேண்டும் என்கிற நோக்கில், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற ரேஞ்சில் அலைபவர்களைக் கண்டால் நிஜமாகவே பாவமாகக்தான் இருக்கிறது. ராகுல் காந்தி மோடியை hug செய்ததைப் போல இவர்களை எல்லாம் hug செய்து கொஞ்சம் அன்பைக் கொடுக்கலாம் என்றும் தோன்றுகிறது.

எனது அன்பான vurtual hugஐப் பெற்றுக்கொண்டு உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன், கை, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தியல், பானை, ஏணி சின்னங்களில் அளியுங்கள். எல்லா இடங்களிலும் அன்பை வெற்றி பெறச் செய்யுங்கள். 40யிலும் வெறுப்பை டெப்பாசிட் இழக்கச் செய்யுங்கள். ❤

அன்புடன்,

டான் அசோக்