March 26, 2023

சர்கார் படத்திற்க்கு டிக்கட் கிடைக்காதவர்கள் “களவாணி மாப்பிள்ளை’ பாருங்க!

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரித்து உள்ளது. தீபாவளியன்று ரிலீஸாகும் இப்படத்தில் தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதா நாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம் இது குறித்து, “ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி. படமாக உருவாக்கி உள்ளோம். படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதனிடையே பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். அதில் “சர்கார் வெற்றிபெற வாழ்த்துக்கள். அதே நாளில் நான் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படமும் வருகிறது. சர்கார் படத்திற்க்கு டிக்கட் கிடைக்காதவர்கள் என் படத்தை பாருங்கள்.  சர்கார் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் களவாணி மாப்பிள்ளை படத்திற்கு வந்தால்கூட படம் வெற்றி பெற்று விடும். அந்த பெருமை விஜய்யையே சேரும்” என அவர் கூறியுள்ளார்.

ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்

நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.