களவாணி 2 படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாட்டு இம்புட்டு ஹிட்டா!?

களவாணி 2 படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாட்டு இம்புட்டு ஹிட்டா!?

தமிழ் திரையுலகில் இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். இப்போது அதே குழு இணைந்து களவாணி 2 படத்தை உருவாக்கியிருக்கிறது. கோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது.

விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக, மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள். துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார், ஆனாலும் அவரது கதாபாத்திரத்தின் குணாதிசயம் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. இது கண்டிப்பாக ரசிகர்களால் கவனிக்கப்படும்.

களவாணி 2வில் ஓவியாவின் கதாபாத்திரம் முந்தைய படங்களில் குறிப்பாக 90ML படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளிக்கிறார்கள்.

‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாடல் மிகவும் பிரபலமாகி இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படு ஹிட் அடித்த

காருபோட்டு ஓடி வந்து
கையெடுத்து சலாம் போட்டு
காருபோட்டு ஓடி வந்து
கையெடுத்து சலாம் போட்டு

அக்கான்னு தங்கச்சின்னு
அவசரமா உறவ சொல்லி
அக்கான்னு தங்கச்சின்னு
அவசரமா உறவ சொல்லி

ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

தாலிக்கு தங்கம் தாரேன்
தாளிக்க வெங்காயம் தாரேன்
தாலிக்கு தங்கம் தாரேன்
தாளிக்க வெங்காயம் தாரேன்

கூலிக்கு வேலை தாரேன்
கூப்பிட்டாக்கா ஓடியாறேன்
கூலிக்கு வேல தாரேன்
கூப்பிட்டாக்கா ஓடியாறேன்

ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

சாதி நம்ம சாதியின்னர்
தாய்மாரே சரணம்முன்னார்
சாதி நம்ம சாதியின்னர்
தாய்மாரே சரணம்முன்னார்

போடுங்கம்மா ஓட்டுயின்னார்
புடலங்காய பாத்துயின்னார்
அம்மா போடுங்கம்மா ஓட்டுயின்னார்
புடலங்காய பாத்துயின்னார்

ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

ஏழை எளியவங்க
எல்லாருக்கும் நன்மையின்னார்
ஏழை எளியவங்க
எல்லாருக்கும் நன்மையின்னார்

வாழ்வு மலருமின்னார்
வறுமை எல்லாம் கொறையுமின்னார்
வாழ்வு மலருமின்னார்
வறுமை எல்லாம் கொறையுமின்னார்

வேலை கிடைக்குமின்னார்
வெலைவாசி கொறையுமின்னார்
வேலை கிடைக்குமின்னார்
வெலைவாசி கொறையுமின்னார்

ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

சொந்தக்காரன் அடிச்சிகிறான்
சண்டைக்காரன் சிரிச்சுகிறான்
சொந்தக்காரன் அடிச்சிகிறான்
சண்டைக்காரன் சிரிச்சுகிறான்

பச்சையா பல் இழிச்சு
அங்காளின்னா பங்காளின்னா
பச்சையா பல் இழிச்சு
அங்காளின்னா பங்காளின்னா

பத்து நாளு கூத்துதானே
சின்னத்தா
பத்து நாளு கூத்துதானே
சின்னத்தா

அப்புறம் பார்த்தா கூட
சிரிக்க மாட்டான் என்னாத்தா
அப்புறம் பார்த்தா கூட
சிரிக்க மாட்டான் என்னாத்தா

மல்லு வேட்டி துண்டு போட்டு
மைக்கு வச்சு விளம்பரமா
மல்லு வேட்டி துண்டு போட்டு
மைக்கு வச்சு விளம்பரமா

உங்க வீட்டு பிள்ளையின்னார்
ஓட்டு போட வேணும் இன்னார்
உங்க வீட்டு பிள்ளையின்னார்
ஓட்டு போட வேணும் இன்னார்

குட்டி போட்ட பூனை போல
சின்னாத்தா
குட்டி போட்ட பூனை போல
சின்னாத்தா

அவன் கும்புட்ட கைய
எறக்கலயே என்னாத்தா
அவன் கும்புட்ட கைய
எறக்கலயே என்னாத்தா

ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா

இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா
இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

சொக்காயில துபாய் சென்டு
தோளு மேல வெள்ள துண்டு
சொக்காயில துபாய் சென்டு
தோளு மேல வெள்ள துண்டு

போனவாட்டி பிரசிடன்ட்
மறுபடியும் வரணுமுன்டு
போனவாட்டி பிரசிடன்ட்
மறுபடியும் வரணுமுன்டு

ஜெய்ச்சு வந்ததுமே
செல்லாத்த
ஜெய்ச்சு வந்ததுமே
செல்லாத்த

ஊர சிங்கப்பூரா
மாத்துவேன்னு சொன்னத்தா
ஊர சிங்கப்பூரா
மாத்துவேன்னு சொன்னத்தா

ஓட்டு கேக்க வந்தாங்களே
சின்னாத்தா
இப்ப ஒருத்தரையும்
காணலயே என்னாத்தா

என்னும் இந்தப் பாடலை பல அரசியல் கட்சிகள் கூட பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சற்குணம் தயாரித்து இயக்கியிருக்கிறார். மே 2019ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.

error: Content is protected !!