October 16, 2021

கபடி ; உலகக் கோப்பைக்கான செமி பைனலில் இந்தியா!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆண்களுக்கான 3வது உலக கோப்பை கபடி போட்டி இம்மாதம் 7ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஈரான், அமெரிக்கா, போலந்து, கென்யா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

kabadi oct 19

இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்தை சந்தித்தது. வழக்கம் போல் எதிராளிகளை புரட்டியெடுப்பதில் அட்டகாசப்படுத்திய இந்திய வீரர்கள் புள்ளிகளை சரமாரியாக குவித்தனர். அதிகபட்சமாக பிரதீப் நார்வால் 13 புள்ளிகளும், அஜய் தாக்குர் 11 புள்ளிகளும் எடுத்தனர். முடிவில் வெற்றிக்கனியை பறித்த இந்தியா 69–18 புள்ளி கணக்கில் இங்கிலாந்தை பந்தாடியது.

இதில் ரைடு மூலம் 43 புள்ளிகளும், எதிரணியை ஆல்–அவுட் ஆக்கிய வகையில் 10 புள்ளிகளும் சேகரித்த இந்திய அணி, தொடர்ந்து பெற்ற இந்த 4–வது வெற்றியின் மூலம் அரைஇறுதிக்குள் நுழைந்தது. இந்த பிரிவில் தோல்வியை சந்திக்காத தென்கொரியா (5 வெற்றி) ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்டது.

இந்திய அணி அரைஇறுதியில் ஈரான் அல்லது தாய்லாந்தை சந்திக்க வேண்டி வரும்.