Living Together கலாச்சாரத்தை மையமாக கொண்டு தயாரான ‘காட்சி பிழை’

Living Together கலாச்சாரத்தை மையமாக கொண்டு தயாரான ‘காட்சி பிழை’

நித்தீ கிரேயர்ட்டர்ஸ் வழங்கும் வசந்த பாலனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த புதுமுக இயக்குனர் மகி இயக்கத்தில் பி ராஜசேகரன் தயாரிப்பில் வெளியாகும் காட்சி பிழை. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர்களான ஹரி ஷங்கர் மேகினா ஜெய் சரண் தான்யா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வரும் Living Together கலாச்சாரத்தை மையமாக வைத்து மிகவும் ஜனரஞ்சமாக கதையை நகர்த்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் மகி.

இது குறித்து விவரித்த இயக்குநர், “ஆம்..காதலையே பெரும் கலாச்சார சீரழிவாகக் கருதும் இந்த பிற்போக்கான சமூகம், லிவிங் டுகெதர் உறவு முறையை பெரும் கசப்புடனேயே அணுகுகிறது. ஒவ்வொரு மதம்/இனம்/சாதி ஆகியவற்றுக்கான முறைப்படி திருமணம் செய்து வாழ்வதையே நம் கலாச்சாரமாகக் கருதுபவர்கள் இந்த உறவு முறையை எதிர்க்கவே செய்கிறார்கள். கலாச்சார மீறல் என்பதை யெல்லாம் தாண்டி அது குறித்தான புரிதல் நம்மிடையே குறைச்சலாகவே உள்ளது.

உண்மையில் திருமண வாழ்க்கையை விடவும் சிக்கலானது லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை. வெறும் காதலும் காமமும் மட்டுமே அங்கு பங்குகொள்வதில்லை. திருமணமானால் வருகின்ற அத்தனை பொறுப்புகளையும் திருமணம் செய்யாமலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும். சில கதை களில், திரைப்படங்களில் காட்டுகிற மாதிரி தினமும் ஊர் சுற்றிவிட்டு இரவில் கட்டிப்பிடித்து தூங்குவது அல்லது ஒரே வீட்டில் ரொமான்ஸ் செய்துகொண்டிருப்பது மட்டுமே லிவிங் உறவு கிடையாது. பாலியல்ரீதியான உறவு இருந்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமைப்பது, துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, வீட்டை ஒழுங்குசெய்வது என எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இந்த விஷயங்களிலேயே சண்டை வரத்துவங்கிவிடும். காதலர் களாக இருக்கும்போது காதல் மட்டுமே இருந்த உறவு லிவிங் வாழ்க்கைக்குள் செல்லும் போது புரிதல், பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றோடு தொடர்வதாக இருக்கும். மேலும் இந்த உறவில் பொருளாதாரம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

இதனால்தான் தமிழ் சினிமாவில் Living Together கதைகள் வருவது குறைவே அப்படியே வந்தாலும் முகம் சுளிக்கும் காட்சிகள் இருப்பதால் மக்களிடையே வரவேற்பு கிடைப்பதில்லை ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு Living Together வாழ்க்கையில் இதுவரை காட்டாத பகுதியை அனைத்து மக்களும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது.
” என்றார்

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

காட்சி பிழை வரும் வெள்ளி ( டிசம்பர் 28 ) முதல் திரைக்கு வரவிருக்கிறது.

error: Content is protected !!