காளிதாஸ் – விமர்சனம்!

காளிதாஸ் – விமர்சனம்!

இப்போதெல்லாம் புத்தகம் படிக்கும் ஆர்வம் அருகி போய் விட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை எல்லாமே நூல் வடிவில் மட்டும்தான் தெரிந்து கொள்ள முடிந்ததால் வாசிப்பானுவம் அதிகமாக இருந்தது. அச்சூழலில் மாலை மதி மற்றும் பாக்கெட் நாவல் போன்ற பெயரில் பல்வேறு மர்ம அல்லது துப்பறியும் கதைகள் வந்தன. அது போன்ற கதைகளில் துப்பறியும் ஜாம்பவான்களாக ஆரம்ப காலத்தில் தமிழ்வாணனின் சங்கர்லால் தொடங்கி சுஜாதாவில் கணேஷ் & வசந்த், புஷ்பா தங்கதுரையின் இன்ஸ்பெக்டர் சிங், ராஜேஷ் குமாரி விவேக், பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் & சுசிலா என்ற பல்வேறு கற்பனைப் பாத்திரங்களுக்கு ரசிகர் மன்றங்களெல்லாம் இருந்தது என்றால் பார்த்து கொள்ளலாம்.. அதெல்லாம் ஒரு கனா காலம் என்றாகி விட்ட நிலையில் அதே போன்று  பக்காவான க்ரைம் த்ரில்லர் நாவல் ஒன்றை புது இன்வெஸ்டிகேட்டிவ் டீம் துணையோடு முழுமை யான பேமிலி கமர்ஷியல் சினிமாவாக ‘காளிதாஸ் ’என்ற பெயரில் வழங்கி சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில்.

அதாவது போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத். அவர் கண்ட்ரோலி இருக்கும் ஏரியாவில் சில பெண்கள் அடுத்தடுத்த நாளில் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கின்றனர். இதெல்லாம் தற்கொலை தான் என நினைக்கிறார் பரத். ஆனால், இப்படி தொடர்ந்து நடப்பதால், இதை ஸ்பெஷலாக விசாரிக்கும் பொறுப்பை அசிஸ்டெண்ட் கமிஷனரான சுரேஷ் மேனனிடம் கொடுக்கிறார்கள். ஆனாலும் சுரேஷ் மேனன் ஒரு பக்கமும் இன்ஸ்பெக்டர் பரத் இன்னொரு ட்ராக்கிலும் போய் மேற்படி மரணங்களின் மர்ம முடிச்சை அவிழ்ப்பதுதான் கதை.

பரத்.. இப்படத்தின் ஹீரோ என்று சொல்ல முடியாவில்லை.. ஆனால் இன்ஸ்பெக்டர் ரோலுக்கு என்ன தேவையோ அதை வழங்கி இருக்கிறார். பரத்தின் மனைவி ரோலில் வரும் ஆன் ஷீத்தல், உதவி ஆணையராக நடித்துள்ள சுரேஷ் மேனன் ஆகியோர்தான் படத்தின் முதுகெலும்பு. கொலை யான பெண் உடலை புரட்டிப் பார்ப்பதில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு சூழலிலும் தன் அனுபவ முத்திரையை வெளிககட்டுவதில் சுரேஷ் மேனன் ஸ்கோர் செய்யும் போது, ஆன் ஷீத்தல் கள்ள காதலனை (?) நினைத்து ஏங்கும் காட்சிகளில் கைத் தட்டலே வாங்குகிறார். ப்ளேபாய் ரோலில் வரும் ஆதவ் கண்ணதாசன் ஆளும் , நடிப்பும் அமர்களம்.. இனி இந்த இவரை பல்வேறு படங்களில் பார்க்கலாம்.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால் பின்னணி இசையில் தேவையான அளவு மிரட்டியிருக்கிறார். சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு ஓ கே.

கதை ஆரம்பம் முதல் பொத் என்ற சத்தத்துடன் தொடங்கி க்ரைம் ட்ராக்கிலேயே போனாலும் மையப்புள்ளியாக கணவன் & மனைவிக்கான இடைவெளி மற்றும் ஏக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை பிரமாதமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார் ஸ்ரீ செந்தில். இதில் கொஞ்சம் எல்லை மீறினாலும் அடல்ஸ் ஒன்லி-யாகி விடும் காட்சிகளை எல்லாம் கவனமாக உணர்ந்து தவிர்த்திருப்பதன் மூலம் தனிக் கவனம் பெறுகிறார் இந்த இளம் இயக்குநர். ஆரம்பம் முதல் நடப்பதெல்லாம் தற்கொலை அல்ல என்று யூகித்து விடும் ரசிகர்கள் எவருமே நினைக்காத க்ளைமாக்ஸைக் காட்டி அசத்தியும் விடுகிறார்..

மொத்தத்தில் சகல தரப்பினரும் குடும்பத்தோடு காண வேண்டியவன்தான் இந்த காளிதாஸ்!

மார்க் 3.5 / 5

error: Content is protected !!