February 8, 2023

காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்!

கோ’ பார்க்காமல், ‘சாரி’ சொல்லி ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு வாழ்ந்தால் இந்த ‘2 கே’ காலத்து காதல்கள் சிறப்பாக இருக்கும் என்ரு சொல்லி வந்திருக்கும் படம்ே ‘காலங்களில் அவள் வசந்தம்’. ஆனால் சிம்பிளாக சொல்ல வேண்டிய கதையை சுற்ரி வளைத்து சொல்லி இருப்பதால் சலிப்பூட்டும் பாணியில் உள்ளது

அதாவது வருஷா வருஷம் புதுசாக ஒரு கேர்ளை கண்டதும் காதலிக்க ஆசைப்படும் நாயகனுக்கு ஒரு நாள் திடீரென கல்யாணம் ஆகி விடுகிறது. கல்யாணத்துக்குப் பிறகு மனைவியைத் தீவிரமாகத்தான் லவ் செய்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் உன்னுடையது காதலே இல்லை என்று மனைவி அதிரடியாக சொல்லி விலகி போக முடிவெடுக்கிறார். அதனால் அப்படியே ஷாக் அடித்து போகும் நாயகன், என்ன முடிவெடுக்கிறார் இறுதியில் என்னவாகிறது என்பதைச் சொல்லியிருக்கும் கதையே காலங்களில் அவள் வசந்தம்.

நாயகன் கெள்ஷிக்ராம் புதுவரவு. காதல், ஆட்டம், பாட்டம் ,சோகம் ஆகிய அனைத்திலும் ஜஸ்ட் பாஸ் ஆகி விடுகிறார். நாயகி அஞ்சலிநாயர். அமைதியான அழகில் ஈர்ப்பதோடு, கணவனின் அன்புக்கு ஏங்கும் காட்சிகளில் கலங்க வைக்கிறார். இன்னொரு நாயகி ஹோரோசினி அப்பாவியான அழகி. அதற்கேற்ப நடித்து காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறார். விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், சுவாமிநாதன் ஆகியோரின் நடிப்பும் மோசமில்லை ரகம்.

கோபிஜெகதீசுவரன் ஒளிப்பதிவு சிறப்பு. ஹரியின் இசை கேட்கும் ரகம். லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு படத்தின் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கிறது. இயக்குநர் ராகவ் மிர்தாத் காதலுக்குப் புதிய விளக்கவுரை எழுதியிருக்கிறார். அதே சமயம் பல இடங்களில் மணிரத்தினத்தின் சாயல் தெரிகிறது. குறிப்பாக மெளன ராகம் பார்ட் டூ என்ற உண்ரவைக் கொடுக்க முயல்கிறது.

மொத்தத்தில் காலங்களில் அவள் வசந்தம் – கோலிவுட்டில் எக்ஸ்ட்ரா ஒரு சினிமா

மார்க் 2.75/5