கனடா ; லிபரல் கட்சி ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகிறார்!
கனடா நாட்டில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஆனால் அவர்து கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 99 இடங்களிலும், குயிபெக்கோயிஸ் கட்சி 25 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.019ம் நடந்த பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், மீண்டும் தேர்தலை சந்திக்க ட்ரூடோ முடிவு செய்தார். இதனை தொடர்ந்து நேற்று 338 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால், மற்ற கட்சிகளான ஜனநாயகக் கட்சி, எதிர்க்கட்சியான பழமைவாதக் கட்சி (கன்சர்வேட்டிவ்), பிளாக் குயிபிக்கோயிஸ் ஆகிய கட்சிகளைவிட அதிகமான இடங்களை லிபரல் கட்சி பிடிக்கும் என்றாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெரியவில்லை. நியூயார்க் டைம்ஸ், சிடிவி, குளோபல் நியூஸ், சிபிசி, ஸ்புட்னிக் ஆகிய ஊடகங்களும் இதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளன. லிபரல் கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்காக 170 இடங்களைப் பிடிக்குமா என்பதை உறுதியாகத் தெரிவிக்கவில்லை. கனடாவில் மொத்தம் 338 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 170 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.