சுப்ரீம் கோர்ட்டும், லோதா கமிட்டியும் “தமிழ்நாடு அமைப்புகள் பதிவாளர் சட்டத்தை” மீறியுள்ளனர்! – கட்ஜூ கம்ப்ளையண்ட்

சுப்ரீம் கோர்ட்டும், லோதா கமிட்டியும் “தமிழ்நாடு அமைப்புகள் பதிவாளர் சட்டத்தை” மீறியுள்ளனர்! – கட்ஜூ கம்ப்ளையண்ட்

ஐபிஎல் சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) சீரமைப்பதற்காக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு கடந்த ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்தது. 70 வயதுக்கு மேல் கிரிக்கெட் வாரியப் பதவியில் இருக்கக்கூடாது, அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பிசிசிஐயில் பதவி வகிக்கக்கூடாது என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இதில் இடம்பெற்றிருந்தன. இதை எதிர்த்து பிசிசிஐ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த மனு மீது தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை 6 மாதங்களுக்குள் அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐயின் நிர்வாகக் குழு கூட்டத்தில் லோதா கமிட்டி யின் பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கு வதற்காக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தலைமையில் 4 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப் பட்டது. இந்த குழு லோதா கமிட்டிக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே பாலமாக செயல்பட்டு புதிய பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை வழங்கும் என்று கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது.

katju aug 7

இதனிடையே நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கத்தில் அறிவுரையாளராக பிசிசிஐ முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவை நியமித்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் விரிவான அமர்வுக்கு மறு ஆய்வு மனு செய்ய பிசிசிஐ-க்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது, சட்ட விரோதமானது. அரசியல் சாசனக் கொள்கைகளை மீறுவதாக அந்த உத்தரவு உள்ளது. நம் அரசியல் சாசனப்படி நம்மிடம் சட்டமியற்றுவோர், செயல்படுத்துவோர் மற்றும் நீதித்துறை ஆகியவை உள்ளன. இதில் அந்தந்த செயல்பாடுகள் குறித்து கடுமையான வரையறைகளும், வேறுபாடுகள் உள்ளன. சட்டமியற்றுவோர்கள்தான் இதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும். நீதித்துறையே சட்டங்களை இயற்றத் தொடங்கினால் இது ஒரு அபாயகரமான முன்மாதிரியாகிவிடும்.

எனவேதான் நான் உத்தரவை இன்னும் விரிவான அமர்வுக்கு மறு ஆய்வு செய்யுமாறு மனு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் லோதா கமிட்டியிடம் அவுட் சோர்ஸ் செய்து பிசிசிஐ-க்கான தண்டனையை முடிவு செய்துள்ளது.

பிசிசிஐ செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கவே சுப்ரீம் கோர்ட் லோதா கமிட்டியை நியமித்தது. அதுவரை சரியே. லோதா கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்தபிறகு அதனை நாடாளுமன்றத்துக்குத்தான் அனுப்ப வேண்டும். அமைச்சரவையே இதனை ஏற்பதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும். நீதித்துறை சட்டமியற்ற முடியாது.

சுப்ரீம் கோர்ட்டும், லோதா கமிட்டியும் “தமிழ்நாடு அமைப்புகள் பதிவாளர் சட்டத்தை” மீறியுள்ளனர். அரசியல் சாசன சட்டத்தை மாற்ற வேண்டுமெனில் 2/3 பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றத்தால் பிசிசிஐயின் விதிமுறைகளை மாற்றியமைக்க முடியாது.

பிசிசிஐ-க்கு சீர்திருத்தம் தேவை என்பதை ஒப்புக்கொண்டால், நீதித்துறைக்கும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இந்திய நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இதுபோன்ற அபாய போக்கை தொடங்கினால் நாளை சுப்ரீம் கோர்ட் செய்தி ஊடகங்களின் எடிட்டோரியல் கொள்கைகளையும் தீர்மானிக்கத் தொடங்கலாம், பத்திரிகையாளர்களின் பணிக்காலத்தையும் தீர்மானிக்கலாம் இது அபாயகரமானது என்று கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!