சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றார்!

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றார்!

தொன்மையான மொழி என்பதால் தமிழை கற்க ஆவலாக உள்ளேன் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

cj apr 5

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய்கிஷன் கவுல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கடந்த பிப்ரவரி மாதம் பதவி ஏற்றார். இதையடுத்து ஐகோர்ட் மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட் மூத்த நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார்.இதையடுத்து அவரது பதவி ஏற்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை செயலாளர் சிவ்தாஸ்மீனா, சென்னை உயர்நீதி மன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதிகள் மணிக்குமார், எஸ்.நாகமுத்து உள்ளிட்ட ஐகோர்ட் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், அய்யாத்துரை, தமிழக தலைமை குற்றவியல் வக்கீல், அரசு வக்கீல்கள், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், துணை தலைவர் சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார், நூலகர் காமராஜ், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.நளினி உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜிக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அதை தொடர்ந்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, ஆளுநர் வித்யாசாகர்ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு, தலைமை நீதிபதியும், ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.இதன் பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஹ¨லுவாடி ஜி.ரமேஷ் ஆகியோர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் இந்திரா பானர்ஜி பேசிய போது:கொல்கத்தா நீதிமன்றமும், சென்னை நீதிமன்றமும் ஒரே நேரத்தில் உருவானவை. தொன்மையான மொழி என்பதால் தமிழை கற்க ஆவலுடன் உள்ளேன்.அரசியல் சாசனத்தின்படி செயல்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் புகழ் மிக்க பாரம்பரியத்தை மேலும் உயர்த்த பாடுபடுவேன்”என இந்திரா பானர்ஜி கூறினார்.

201704051203197141_Tamil-I-am-eager-to-learn-High-Court-Chief-Justice-Indira_SECVPF

சென்னை ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி காந்தகுமாரி பட்நாகர், 1992-ம் ஆண்டு பதவி வகித்தார். இதன்பின்னர் ஐகோர்ட்டில் 2-வது பெண் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1957-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். 1985-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்துக் கொண்ட இந்திரா பானர்ஜி, 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு டெல்லி ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாக பதவி ஏற்ற இவர், சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!