June 26, 2022

ஆணுக்கு பெண் நட்பும், பெண்ணுக்கு ஆண் நட்பும் மிக அவசியம்!

ஆண்கள் பெண்களை உபயோகப்படுத்துகிறார்களா?

ஆம் .எல்லா இடத்திலும்.

தாய்மை ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். உசுரையே கொடுப்பாள் ஒரு தாய்.

அதுதான் பலம், பலவீனம்.

ஆம் ஒப்புக்கொள்கிறேன். உணர்வுதான் பெண்களுக்கு முதலில்.

திறமை, வெற்றி, பணம், புகழ் எல்லாம் பின்புதான். அவள் உணர்வு ரகசியம் தெரிந்த ஆண் எளிதில் அவளோடு விளையாட முடியும். அது எல்லாருக்கும் கை வராது. கவினுக்கு இருக்கிறது. இன்றும் சாக்‌ஷி கவினுடன் இருந்த நாள் மகிழ்வானது என்கிறாள். ஏதோ ஒரு உணர்வு தோள் தேவைப் படுகிறது. அதை கவின் சரியாக அளிக்கிறான். அது லாஸ்லியாவிற்கும். நட்பு என போர்த்திக் கொள்கிறாள்.

ஒரு ஆண் பெண்ணை உதற முடியும். உணமையான அன்பில் இருக்கும் பெண்ணால் அதை செய்ய முடியாது. அப்படி முடிந்தால் உணர்வுப்பூர்வமாக இணையவில்லை என்றே அர்த்தம். ஏதோ ஒரு சந்தர்ப்பம், ஈர்ப்பு என வைக்கலாம். நிஜக்காதல் இருக்கும் பெண்கள் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சாக்‌ஷிக்கு அது வந்திருக்க வாய்ப்பு இருக்கலாம்.

இதெல்லாம் தெரிந்துதான் பொள்ளாச்சி ஆரம்பித்து பிக் பாஸ் வரை விளையாட்டாய் செல்கிறது.

அதுக்கு..சரி ஆணையே குறை சொல்லனுமா என்ன?

பெண்ணும் பை சொல்ல பழக வேண்டும் .ஆணை உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.. என்று செய்தால் சரியாகுமா?

பெண் இயல்புக்கு முரணான காரியம். இருப்பக்கத்திலும் விதி விலக்குகள் உண்டு.

Kavin Thirumurugan ஒரு ஸ்பெஷல் கிட்ஸ் க்கான பள்ளி நடத்துகிறார். அதில் குழந்தை இப்படி என்றவுடன்..ஆண்கள் குழந்தையோட,மனைவியை விட்டு ஓடிவிடுவது மிக சகஜமாக இருக்கு. பெண்கள் பெரும்பாலும் தனியே சமாளிக்கின்றனர். அதுப்போல் பெண் செய்வது அரிது என்கிறார்.

என் மனைவி, என் குழந்தை எல்லாம் எனக்கு மகிழ்வை தந்தால் மட்டுமே உன்னுடன் இருக்க முடியும் அதில் பிரச்சனை வந்தால் விலகிவிடுவேன் என்பதாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன்.

ஏன் இப்படி இருக்க வேண்டும்?

சமூகம்தான் காரணம். பெண் அடிமை .அவள் நீ சொன்னால் கேக்கனும். உன்னை மகிழ்விக்க வந்த போகப்பொருள். அவள் உனக்கு சமம் இல்லை. அவள் உடமை. பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் ( என் பொண்டாட்டிய ராணி மாதிரி வச்சுருக்கேன் என்பது அதில்தான்) அதே சமயம் வேலைக்கார தேனீ போலவும் வச்சுருப்பேன். உபயோக இல்லாவிடில் தூக்கி எறி .போகப்பொருள் இல்லையா..

இதை எல்லாம் முறியடிக்க வேண்டும். மதுக்கு பேச தெரியல. ஆனால் உணர்ந்திருக்கார். ஏதோ இங்கு தவறுன்னு. சரியே மது. அந்த உணர்வு மிக சரி.

எல்லா கட்டமைப்பு, சிந்தனை உடைக்க வேண்டியிருக்கு. சேரனுக்கு அது புரிகிறது. சிந்தனையில் மேம்பட்டவர் அவர். அதனால் மிக தடுமாறுகிறார். அந்த இடத்தில் பொருந்த முடியவில்லை. தனியாக ஒருவர் வாழ்வது நரகம் எந்த இடமாகினும்.

இங்கு என்ன செய்ய வேண்டும்.

பெண்கள் மிக பலமானவராக மாற வேண்டும்.

திறமைக்கும், பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

ஆண் மேல் அன்பு அவனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் இருவரையும் புதைக்குழியில் சிக்க வைக்க கூடாது.

பொசசிவ்னஸ் பற்றி கொஞ்சம் தெளிய வேண்டும். இயற்கைதான். வீக்கர் செக்ஸ் என்பதை முறியடித்ததைப்போல் இதை விட்டும் வெளி வர வேண்டிய கட்டாயம்.

ஆண், பெண் நட்பை நட்பாக கவனிக்க வேண்டும். சந்தேகம் இல்லாமல். இன்று ஆண் பெண் நட்பின்றி உலகம் இல்லை. எனக்கு இணையத்தில் ஒரு சொல் கூட தவறாய் பேசாத ஆண் நட்புகள் நூறில் தொடும்.சிறிய வட்டத்திலும் அவர்கள் உண்டு. அவர்கள் என்றும் என்னை உபயோகம் செய்வதில்லை. நானும்..நட்பு பரிமாறல். அவர்கள் மேம்படல்..அதில் நானும். அக்கறை நட்பே.. பெருமைப்படுகிறேன்.எனக்கு பெண் நட்புகளை விட ஆண் நட்புகள் சந்திக்காவிடில் கூட என்னை கற்றுக்கொள்ள வைக்கிறார்கள்.

புத்தகங்கள் எனக்கு அளிப்பதில் இருந்து டயட் பற்றி பேசுவது, மனித மனம், வளம் எல்லாவற்றுக் கும் நன்றிகள் அவர்களுக்கே. பெரும்பாலான பெண்கள் இது வரை அடுத்தவரை கை தூக்கி விட வேண்டும் என்பதில் கவனம் கொள்வதில்லை. நான் அதை ஆண்கள் பார்த்து கற்றுக் கொண்டுள்ளேன். சக பெண்கள் அடுத்த நிலை அடைய என்னாலன செயல்களை தொடர்ந்து செய்ய அவர்களே காரணம்.

உண்மையான ஆண் மகன்

பெண்ணை பயன்படுத்த மாட்டான்.

திறமைகளுக்கு மதிப்பு தருவான்.

அதை அடுத்த நிலை செல்ல நட்புடன் உதவுவான்.

கைப்பிடித்தால் கூட பாலினம் இருக்காது. அது தாண்டிய அன்பு இருக்கும்.

ஆணுக்கு பெண் நட்பும், பெண்ணுக்கு ஆண் நட்பும் மிக அவசியம்.

அதை ஆண்கள் கண்ணியத்தோடு செய்ய வேண்டும் . அப்பேற்பட்ட ஆண்களே உண்மையான ஆண்.

அதை தினம் கற்றுக்கொடுத்து ஆண்..பெண்ணை மதிக்க சொல்லித்தரும் தாய்மைகளே..
உண்மையான பெண்.

என்று கிடைக்கும் சமத்துவ உலகம்?

அது உடையில் அல்ல..உள்ளப்பலத்தில் இருக்கிறது.

கீர்த்தி