ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் முன்னாள் போலீஸ் டெரிக் ஷாவின்!
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரில் கடந்த வருடம் மே 25 அன்று ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார். அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டாலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அங்கு காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 காவலர்கள் வந்தனர். புகார் தொடர்பாக விசாரிக்க ஜார்ஜ் பிளாய்டை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரி டெரிக் சாவின், ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தி கொன்றார். அச்சமயம் தன்னால் மூச்சுவிட முடியவில்லை காலை எடுங்கள் என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொடூரச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் போராட்டங்கள் பல்வேறு நாட்களாக தொடர்ந்தது. அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. மேலும், அவரை கொலை செய்த போலீஸ் அதிகாரி டெரக் சவின் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அதே சமயம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறப்புக்கு பின்பு இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்ததற்கு மினியாபோலிஸ் நகரம் 27 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக் கொண்டது. ஃப்ளாய்ட் குடும்பத்தின் வழக்கறிஞரான பெஞ்சமின் க்ரம்ப், “இந்த செட்டில்மென்ட் அமெரிக்க வரலாற்றில் ஒரு தவறான மரண வழக்கின் விசாரணைக்கு முந்தைய மிகப்பெரிய தீர்வு என்று கூறினார்.
Judge Peter Cahill reads guilty verdict in trial of Derek Chauvin, the former policeman who has been convicted of murdering George Floyd https://t.co/0BXNKYyACT pic.twitter.com/RlBcatsY1A
— BBC Breaking News (@BBCBreaking) April 20, 2021
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்.” வழக்கின் விசாரணை முடிவில் ஃப்ளாய்ட் கழுத்தில் முழங்காலை வைத்து நெரித்த டெரக் சவின் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவரின் குற்றத்துக்கான தீர்ப்பு 8 வாரங்களில் அளிக்கப்படும் என வழக்கு நடந்து வந்த hennepin county நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவல் அதிகாரி டெரக் சவின் மீது 3 பிரிவுகளில் ஃப்ளாய்ட் கொலை குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதால் அவருக்கு 40 முதல் 70 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கப்பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த தீர்ப்பை வரவேற்று ஃப்ளாய்ட் உறவினர்கள் ஆரவாரம் செய்தனர். இதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்தத் தீர்ப்பு அமெரிக்க நீதி வரலாற்றில் மிகமுக்கியமான படி. ஃப்ளாய்ட் இறப்பு என்பது முழு வெளிச்சத்தில் நடந்த ஒரு படுகொலை. இனவெறி தேசத்தின் ஆன்மாவுக்கு ஒரு கறை. அதனை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று கூறியிருக்கிறார். இதேபோல் உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிராக இருப்பவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்று இருக்கின்றனர்.