பாஜகவின் தேசிய தலைவர் ஜெபி நட்டா பதவி நீடிப்பு

பாஜகவின் தேசிய தலைவர் ஜெபி நட்டா  பதவி நீடிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக குழு அக்கட்சியின் தலைவர் ஜெபி நட்டாவின் பதவி காலத்தை அடுத்தாண்டு ஜீன் மாதம் வரை நீட்டித்து ஒருமனதாக முடிவெடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடந்துவரும் கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர்கள், அனைத்து மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். புதுடெல்லியில் நடந்துவரும் இரண்டாவது நாள் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் நட்டாவே தலைவராக தொடர்வார் என்ற முடிவு அறிவிக்கப்பட்டது. நட்டாவின் பதவிக்காலத்தை நீட்டித்து உள்துறை அமைச்சர், கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முன் மொழிந்தார்.

கூட்டத்தின் முதல் நாளில் இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில தேர்தல்களிலும் வெற்றியை உறுதி செய்யுமாறு கட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் முழுவளர்ச்சி மற்றும் லோக்சபா தேர்தல் உள்ளிட்ட தேர்தலில் கட்சியின் வெற்றிவாய்ப்புகள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கை பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது கட்சியின் தேர்விலும் எதிரொலிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நட்டா ஆகிய இருவரால் 2019ல் இருந்ததை விட பொதுத்தேர்தலில் பாஜகவின் வெற்றிபெறும் என்று அவர் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார்.

error: Content is protected !!