October 25, 2021

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை!

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நிறைவடைய உள்ளது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டி யிட்ட ஜோ பைடன் வெற்றிக்கனியைப் பறித்துள்ளார். அதே கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று காலை நிலவரப்படி, பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பைடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் வாக்களிக்கும் தகுதி உடைய மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23.9 கோடி. இவர்களில் 16 கோடிக்கு இதுவரை வாக்களித்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. எல்லா மாகாணங்களிலும் அஞ்சல் வாக்கு முழுமையாக எண்ணப்படும் பொழுது வாக்களித்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 3ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் வாக்களித்தோர் 26.9 சதவீதம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆயிரத்தி தொள்ளாயிரத்துக்கு பிறகு இந்த அளவுக்கு வாக்கு பதிவானது 2020 ஆம் ஆண்டில்தான் என கூறப்படுகிறது. இதுவரை கிடைத்த வாக்கு எண்ணிக்கை விபரங்களின்படி ஜோ பிடேன் 7.2 கோடி வாக்குகளை பெற்றதாக கணக்கிடப்பட்டுள்ளது. டிரம்ப் பெற்ற வாக்குகள் 6.85 கோடி ஆகும்.

ஆனாலும் அதிபர் பதவியை தீர்மானிக்கக்கூடிய ஒரு சில மாநிலங்களில், மூன்று மாநிலங் களிலும் வாக்குகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. ஜோ பைடன் நெவாடா மற்றும் அரிசோனாவில் ஒரு சிறிய முன்னிலையில் உள்ளார். ஜார்ஜியாவில் டிரம்ப் ஒரு சிறிய முன்னிலையில் உள்ளார், மற்றும் மிக்சிகனில் பைடன் வெற்றி பெறுவார் என்று கணிக்கப் பட்டுள்ளது. ஆக அமெரிக்க அதிபராக ஜோ பிடேனும் அமெரிக்க உதவி அதிபராக கமலா ஹாரிஸும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.