August 4, 2021

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலிப் பணி இடங்கள்!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: தட்டச்சர் 3, அலுவலக உதவியாளர் 9, உதவி மின் கம்பியாளர் 5, பிளம்பர் 3, இளநிலை மின் பொறியாளர் 1 உட்பட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 36 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தட்டச்சர் பணிக்கு பத்தாம் வகுப்புடன் ஆங்கிலம், தமிழில் தட்டச்சு பயிற்சி, அலுவலக உதவியாளர் பிரிவுக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: 1.2.2021 அடிப்படையில் 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பிற தகுதிகள்: ஹிந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி: இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்துார் — 628 215, துாத்துக்குடி மாவட்டம்.

கடைசி நாள்: 24.2.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு