கொஞ்சம் ஹைடெக் வசதிகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பெற வருகிற 9–ம் தேதி முதல் முன்பதிவு செய்வது அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தேவைப்படுவோர் ‘ஹலோ ஜிப்மர்’ என்ற செல்போன் செயலி மூலம் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி இதோ:
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை வளாகங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. எனவே ஜிப்மர் மருத்துவமனையில் நாளை மறுநாள் முதல் அனைத்து மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் முன்பதிவு செய்து மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே வெளிப்புற சிகிச்சை சேவைகள் வழங்கப்படும். வெளிப்புற சிகிச்சை பெற விரும்புவோர் தொலைபேசி மூலம் முன்பதிவு பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
இதற்கான தொலைபேசி எண்களை www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் ‘ஹலோ ஜிப்மர்’ என்ற செல்போன் செயலி மூலம் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே வேளையில் மருத்துவமனையில் அனைத்து அவசர சேவைகளுக்கும் எந்தவித முன்பதிவும் தேவையில்லை.
ஒருநாளைக்கு ஒவ்வொரு துறையிலும் 100 நோயாளிகள் மட்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து மருத்துவ ஆலோசனை பெற அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார்.
ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…
தமிழ்நாடு முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (29.1.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள்…
சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க்…
”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” 69 வயதில் ஒரு மனிதன் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும்…
This website uses cookies.